உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "தமிழக இளைஞர் வளத்தை கூறி முதலீடுகளை ஈர்ப்போம்": முதல்வர் ஸ்டாலின்

"தமிழக இளைஞர் வளத்தை கூறி முதலீடுகளை ஈர்ப்போம்": முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரான்ஸ்: தமிழகத்தில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்க உள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை, 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது ஜோக்கோவிச் உடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.பயணம் குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்பெயின் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம். ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழகத்தில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Sridhar
ஜன 30, 2024 13:39

நரம்பு தளர்ச்சி பிரச்னையா, தண்டுவட பிரச்னையா, இல்ல புற்றுநோயாங்கற விவாதத்த தாண்டி முடி நடுதல் விசயத்திலேயும் அந்த நாட்டில் நிபுணர்கள் நிறையபேரு இருக்காங்களாமே? சும்மா சொல்லக்கூடாது நம்ம ஆளு ஏகப்பட்ட ஆராய்ச்சி செஞ்சுபுட்டுதான் போயிருக்குறாரு. சும்மா அப்பப்போ ஒரு போட்டோ போட்டு தமிழக மக்களை ஏமாத்தலாம்னு நினச்சா, RAW பின்னாலயே வந்து நாள்பூரா நடக்குற விஷயங்களை ஆவணப்படுத்திட்டு இருக்குங்கற உண்மைய போட்டு உடைச்சிருவோம்.


Ramesh Sargam
ஜன 29, 2024 23:35

தமிழ் நாட்டில் முக்கால்வாசி இளைஞர்கள் வேலைவெட்டி இல்லாமல், அரசியல்வாதிகள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். குடித்து பொழுதை ஓட்டுகிறார்கள்.


C.SRIRAM
ஜன 29, 2024 23:02

பொய் சொல்லவும் ஒரு அளவு உண்டு . ஸ்பெயின் பொருளாராதர ரீதியில் வலுவான நாடு இல்லை


Gowtham Saminathan
ஜன 29, 2024 22:28

சரி உதறல் மற்றும் உளறலை கட்டுப்படுத்த சிகிச்சை போனது தெரிஞ்சு போச்சு... டோப்பாவ கலட்டி ஓரமா வைங்க....அதுக்கும் அங்க நடவு போடுவாங்க


katharika viyabari
ஜன 29, 2024 21:42

எட்டு மணிநேரம் வேலை செய்த காலம் போய் இப்ப அவனவன் பதினோரு மணிநேரம் சராசரியாக வேலை செய்ய வேண்டியுள்ளது. இப்படியே ஊழல் செய்துகொண்டிருந்தால், வரும் காலத்தில் நம் சந்ததியினர் பதினான்கு மணிநேரம் வேலை செய்தல் தான சாப்பாடு என்றாகிவிடும்.


அருண் குமார்
ஜன 29, 2024 21:01

அந்த இளைஞர்களில் முதன்மையான இளைஞர் நம்ம சின்னவர் அவர்கிட்ட வளம் அதிகமாக தான் இருக்கு


Murugesan
ஜன 29, 2024 20:35

குடிகார நாடாக்கிய அயோக்கிய திமுக


RAMESH
ஜன 29, 2024 20:07

முதல்வர் ஸ்பெயின் போவதில் எதோ ஒரு விஷயம் இருக்கு . இவர் கருப்பு பணத்தை துபாயில் போட்டு வெள்ளையா லுலுமாலா கோயம்பெட்டில் வருவதற்கும் இந்த பயணத்திற்கும் எதோ தொடர்பு இருக்கு . எப்படியும் மாரிதாஸ் கையில் சிக்கிடுவ . பொறுத்திருந்து பார்ப்போம் .


Shankar
ஜன 29, 2024 19:50

ஆமாம் முதல்வரே. தமிழக இளைஞர்கள் காலையில் தூங்கி எழுந்தவுடன் டாஸ்மாக் கடை வாசலில் வரிசைகட்டி நிற்பதை சொல்லி முதலீடு கேளுங்கள்.


P Karthikeyan
ஜன 29, 2024 18:35

தமிழக இளைஞர்கள் தலையை அடமானம் வைத்து கடன் வாங்கி கொள்ளை அடிக்க போகிறார். திருந்தாத தமிழகம். பொய் திராவிடம்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி