உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "திட்டங்களுக்கு காசு இல்லை; ஓட்டிற்கு எப்படி காசு கொடுக்கிறார்கள்?: சீமான் கேள்வி

"திட்டங்களுக்கு காசு இல்லை; ஓட்டிற்கு எப்படி காசு கொடுக்கிறார்கள்?: சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திட்டங்களுக்கு காசு இல்லை என்பவர்கள் ஓட்டிற்கு மட்டும் எப்படி காசு கொடுக்கிறார்கள்' என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.மத்திய சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாட்டு மக்களின் நலனை காக்க நாம் தமிழர் கட்சி போராடுகிறது. பா.ஜ., உடன் கூட்டணி வைத்த அனைவருக்கும் உடனடியாக சின்னம் ஒதுக்கப்பட்டது. சீமானுக்கு கிடைக்க இருக்கும் ஓட்டுகளை தடுக்க முயற்சி நடந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, காசு வாங்கி ஓட்டு போடுபவன் தேச விரோதி. நாங்கள் ஓட்டை விலை கொடுத்து வாங்கவில்லை.

நட்சத்திர விடுதிகள் போல் சமாதிகள்

மக்களிடமிருந்து பெற்றோம். திட்டங்களுக்கு காசு இல்லை என்பவர்கள் ஓட்டிற்கு மட்டும் எப்படி காசு கொடுக்கிறார்கள். குற்றவாளிகளை உருவாக்கும் சமூகமாக இந்த சமூகம் உள்ளது. நாங்கள் ஓட்டு கேட்டு நிற்கவில்லை. வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேட்டு நிற்கிறோம். மற்ற கட்சியினர் விலை கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். நல்ல எண்ணங்களை விதைத்து நாங்கள் ஓட்டு பெறுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் பற்று இல்லை

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: அண்ணாமலை தமிழ் பற்று இல்லாதவர். கர்நாடகாவில் பணியாற்றும் போது பெருமை மிகு கன்னடர் என பேசியவர் அண்ணாமலை. அவருக்கு ஹிந்தி, உருது என பன்மொழி தெரிகிறது. எனக்கு தமிழ் தவிர வேற ஏதும் தெரியவில்லை. தாய்மொழி அழிந்து விட்டால் இனம் அழிந்து விடும். ஒவ்வொரு மொழி பேசுபவர்களை கண்டதும் அதே மொழியில் பேசுவது தான் மொழிபற்றா?. பதவிக்கா யாராவது தமிழர் இல்லை என்று பேசுவார்களா?. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Chennaivaasi
ஏப் 04, 2024 16:36

தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல் பாராளுமன்றத்திற்கு எதற்கு போக விரும்புகிறார்கள்? அங்கு சென்று எதையும் சொல்ல தெரியாமல், வீணாக சண்டை போட்டுகொண்டு கிடைப்பதையும் கிடைக்க செய்யாமல் இருக்கவா? இப்போது இருப்பவர்களை போல


Guruvayur Mukundan
ஏப் 04, 2024 16:24

தமிழ், தமிழ், தமிழ் இதை வெச்சே உருட்டுகிட்டு இருங்க எல்லாம் கொஞ்ச நாள் தான்


somasundaram alagiasundaram
ஏப் 04, 2024 16:01

துறை நஷ்டத்தில் இருக்கும் துறை மந்திரி செல்வந்தராக இருப்பார்..


K.Muthuraj
ஏப் 04, 2024 13:58

கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள் ஏன் கடவுள் வேறு புது இனம் படைத்துக்கொள்ள மாட்டாரா எல்லா மாநில அரசியல்வாதிகளும் ஆக்கமாய் ஒன்றும் செய்வதில்லை இப்படி ஏதாவதொரு காரணத்தினை பிடித்துக்கொண்டு தொங்கிகொண்டுள்ளனர் இதில் இப்பொழுது கமலஹாசன் வேறு ஹாஸ்யம் செய்து கொண்டுள்ளார்


ராமகிருஷ்ணன்
ஏப் 04, 2024 13:20

அரசியல்வாதி பணம் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்று தெரியாமலா கட்சி ஆரம்பித்து அலப்பறை பன்றே. ஆட்சிக்கு வரமாலே எப்படி சம்பாதிச்சேம்ணு என்று எல்லாரும் கேக்குறாங்க. அதுக்கு பதில் சொல்லுங்க


Sivak
ஏப் 04, 2024 12:53

தமிழ் பெயரை சொல்லி ஏமாற்றுவதை தவிர வேற எதுவும் தெரியாது இந்த சீமாண்டீக்கு


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ