உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஞ்சப்பாட்டு பாடுவதே தி.மு.க., அரசின் செயல்

பஞ்சப்பாட்டு பாடுவதே தி.மு.க., அரசின் செயல்

தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

தமிழக ஒட்டுமொத்த கடன் தொகை, 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதில், 40 சதவீதம், தி.மு.க., ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்டு உள்ளது. தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த, தி.மு.க., அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல், பஞ்சப்பாட்டு பாடுவதே, தி.மு.க., அரசின் செயலாக உள்ளது.

டவுட் தனபாலு:

தமிழகத்தின் பொருளாதாரத்தை சரி செய்ய, பிரபல பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமிச்சதே... அந்த குழு என்ன ஆனது; ஏதாவது ஆலோசனைகள் தந்ததா என்ற, 'டவுட்'டுக்கு தமிழக அரசு விடை தருமா?---

தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்:

'பிரதமர் மோடி, ராமர் சிலையை தொடுவதை என்னால் பார்க்க முடியாது; அவர் ராமரை தொடக்கூடாது; புரோஹிதர் தான் தொட வேண்டும். அவர் தொடுவதாக அறிவித்துள்ளதால், நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்' என, புரி சங்கராச்சாரியார் அறிவித்துள்ளார். சனாதன ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக, சமத்துவத்தை வலியுறுத்தும் எங்களை கேள்வி கேட்கும், பா.ஜ.,வினர், இப்போது எங்கே உள்ளனர்; புரி சங்கராச்சாரியாரை கண்டிக்க, பா.ஜ.,வுக்கு தைரியம் உள்ளதா?

டவுட் தனபாலு:

புரி சங்கராச்சாரியார் கதையை விடுங்க... கிட்டத்தட்ட, 55 வருஷங்களுக்கும் மேலாக, தி.மு.க.,வின் தலைமை பீடத்தை, கருணாநிதியின் குடும்பம் மட்டுமே அலங்கரிக்குதே... அடுத்தும் வாரிசுகளை தயார்படுத்துறாங்களே... இது என்ன வகை சனாதனம் என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தருவீங்களா?---

பா.ம.க., தலைவர் அன்புமணி:

மதுவும், போதையும் தமிழகத்தின் பொது அடையாளங்களாகி விட்டன. பேரழிவுப் பாதையில் தமிழகம் வேகமாக வெற்றி நடை போடுகிறது. மதுவையும், கஞ்சாவை யும் ஒழிக்காமல், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதாலோ, ௧ லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி மதிப்பை உயர்த்த இலக்கு நிர்ணயிப்பதாலோ, எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

டவுட் தனபாலு:

அட இவர் வேற... இந்த மாதிரி மாநாடு நடத்துற மண்டபங்கள்லயே மது பரிமாறணும்னு சொல்ற அரசிடம் போய், இதை எல்லாம் சொல்றாரே... இது எல்லாம், செவிடன் காதுல ஊதிய சங்காகவே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

M Ramachandran
ஜன 08, 2024 20:08

பாஞ்சப்பாட்டு பாடுவது பிச்சையய் எடுப்பதற்கெ குடும்பமென பசி தொல்லையால் வாடுது பிச்சையெடுத்து கஷ்ட ஜீவனம் செய்யும் நிலை என்னா செய்வது


T.sthivinayagam
ஜன 08, 2024 19:18

நிவாரணம் தரமால் ஏட்டு சுரக்காயில் கூட்டு வைக்க சொல்லுவது மத்திய பஜாக அரசின் செயல்


Devan
ஜன 08, 2024 16:25

இப்படித்தான் ஒருவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டு விட்டு ஜாமீன் கிடைக்காமல் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறார். இன்னும் இருக்கும் இவரும் எப்போது பாலாஜிக்கு துணைக்கு போக வேண்டிவருமோ


Narayanan
ஜன 08, 2024 11:59

எல்லா வரிகளையும் ஏற்றிவிட்டு காசுபார்க்கும் திமுக அரசு அதை திட்டமிட்டபடி சிலவு செய்யத்தெரியவில்லை . மக்கள் வரிப்பணம் என்ற நல்ல எண்ணம் வேண்டும் . ஏதற்கெடுத்தாலும் கருணாநிதிக்கு சிலை , பேனா ,விழா என்றும் மகளிருக்கு இலவச திட்டங்கள் என்றும் பணத்தை விரயம் செய்கிறார்கள் . இலவசங்களை ஒழித்தாலே போதும் பேருந்துகள் சரியான கட்டணம் வசூலித்து முறையாக கருவூலத்திற்கு வருகிறதா பாருங்கள் .போலி டிக்கெட்டுகள் மூலம் அரசு பேருந்துகள் நஷ்ட்டத்தை சந்தித்து வருகிறது . லஞ்சத்தை ஒழித்தாலே போதும் மீதி வளம் கிட்டும் .


ramesh
ஜன 08, 2024 18:11

உலகத்திலே ,குஜராத்தில் போலி டோல்கேட் அமைத்தது வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த கட்சிக்காரர்களின் கருத்தில் சிறந்ததை எங்கே பொய் தேடுவது


Subramaniyan
ஜன 08, 2024 19:13

கஜானாவில் பணம் இருக்குதா என்று பார்க்காமல், தங்களது இஷ்டத்துத்துக்கு இலவசத் திட்டங்களை அறிவித்து விட்டு, அதை சொல்லி ஓட்டும் வாங்கி விட்டு, மத்திய அரசு நாங்கள் கேட்கும் நிதி கொடுக்கவில்லை என்று குறை கூறுவது ஏன்? நமது இந்தியா திருநாட்டில் என்று இலவசம் ஒழிகிறதோ அன்று தான் இந்தியா உருப்படும்


அசோகன்
ஜன 08, 2024 11:54

தமிழ் நாட்டு கஜானாவை கட்டுமரத்தின் கஜானவாக எப்போதோ மாற்றியாகிவிட்டது......... குழு போட்டாலே அது குப்பைக்கு போய்விட்டது என்று அர்த்தம் ????????????


ramesh
ஜன 08, 2024 10:14

ஏற்கனவே எடப்பாடி உடன் சண்டை போட்டு கூட்டணிக்கு வீட்டு வைத்தார் .இப்போது பாதிக்க பட்ட மக்களுக்கு எதிராக அரசியல் செய்து தமிழ் நாட்டுமக்களிடம் இருந்து வரும் கொஞ்ச ஓட்டையும் இருக்கும் இடம் இல்லாமல் செய்து விடுவார்


ramesh
ஜன 08, 2024 10:12

அண்ணாமலையின் வாய் ஓன்று போதும் தமிழ் நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காமல் வெற்றிடம் ஆவதற்கு


ramesh
ஜன 08, 2024 10:10

பஞ்ச பாட்டு தமிழகம் பாடுகிறதா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதே பஞ்சப்பாட்டு தமிழ் நாட்டு மக்களிடம் தான் வரவேண்டும் அண்ணாமலை .அப்போது பஞ்ச பாட்டு என்று லாவணி பாடியவரின் கதி தமிழ் நாட்டு மக்களிடம் வரும் பொது தான் தெரியும்


ramesh
ஜன 08, 2024 10:05

எங்கள் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொண்டு உத்ர பிரதேசத்தில் உங்கள் பிஜேபி செலவு செய்கிறது .கொடுத்த வரிப்பணத்தில் இருந்து தமிழ் நாட்டுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்க பட்ட பொது கேட்டால் உங்களுக்கு பஞ்ச பாட்டாக தெரிகிறதா அண்ணாமலை . தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழ் நாட்டு பிஜேபி தலைவராக ஏன் இருக்கிறீர்கள் .உத்ர பிரதேசமக்களுக்காக மட்டும் இருக்க வேண்டியது தானே


Suppan
ஜன 08, 2024 12:33

ரமேசு முரசொலியை மட்டும் படித்தால் இப்படித்தான் கருத்து எழுத வரும். நிதி அமைச்சர் நிர்மலா அவர்கள் கூறியதை படிக்கவில்லை போலிருக்கிறது. . தமிழகத்திலிருந்து கிடைத்த வரிப்பணத்துக்கு மேல் கொடுத்தாகிவிட்டது என்றாரே. அதனால்தான் பஞ்சப்பாட்டு பாடக்கூடாது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 08, 2024 12:59

, 2015 ல சென்னையில் வெள்ளத்தால் மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோது அன்றைய மாநில அரசு மத்திய அரசிடம் உதவி கேட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தில்லுமுல்லு கழகமும் திருக்குவளை கோல்மால்புர குரு மகா சந்நிதானமும் பேசிய ஏகடிய பேச்சுக்களை இப்போது படியுங்களேன்.


ramesh
ஜன 08, 2024 13:21

பலபத்திரிகை படிப்பவனுக்கு பலவிஷயங்கள் தெரியும் .உங்களை போன்ற ஒரே கட்சி பத்திரிகையை மட்டும் படிப்பவன் கிணற்று தவளையாக தான் இருப்பான்.அந்த தவளை அந்த கிணறு மட்டுமே இது தான் உலகம் என்று நினைக்கும்


ramesh
ஜன 08, 2024 13:23

ஒரே கட்சி பத்திரிகையை மட்டும் படித்து விட்டு இது தான் உலகம் என்று நினைக்காமல் எல்லாவற்றையும் படியுங்கள்


Sampath Kumar
ஜன 08, 2024 09:02

உங்க ஒன்டர்யம் வாங்கின கடன் இந்த ஒன்பது வருசத்துல எதனை லச்சம் கொடிகள் உன்னக்கு தெரியுமா? பஞ்சப்பட்டு பாடுவது யாரு உங்க பிஜேபி காரனுக தான் கூடிய விரைவில் இந்தியா சலே நடக்கத்தான் போகுது நீதான் பெல் பாய் ஆக இருப்ப பாரு


மேலும் செய்திகள்



புதிய வீடியோ