உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "ஒன்னு தான் கேட்டோம்: இரண்டு கொடுத்தாங்க": தினகரன் "குஷி"

"ஒன்னு தான் கேட்டோம்: இரண்டு கொடுத்தாங்க": தினகரன் "குஷி"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரு தொகுதி போதும் என்று தான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள் என பா.ஜ., கூறியதாக அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில் கூட்டணி கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பா.ஜ., கூட்டணியில் உள்ள அ.ம.மு.க., கட்சி 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இன்று (மார்ச் 20) தினகரன் கையெழுத்திட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oyeam7mv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஒன்னு கேட்டால் 2 கொடுத்தாங்க

பின்னர் தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதலில் பா.ஜ., அதிக தொகுதிகளை கொடுத்தார்கள். பின்னர் பா.ஜ., கூட்டணிக்கு அதிக கட்சிகள் வந்ததால் குறைத்து தந்துள்ளார்கள். நான் ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள் என்று பா.ஜ., கூறியது. அமமுக 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். பா.ஜ., தொகுதிகளை அறிவித்த பின்னர், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.நான் பிறந்த மண்ணான தஞ்சையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளேன். ஆனால் அமமுக நிர்வாகிகள் சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட விரும்புகிறார்கள். தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் அமமுகவின் ஓட்டு வங்கி அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பலத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Kannan
மார் 21, 2024 08:37

ஜே மட்டும் இருந்திருந்தால் அந்த குடும்ப வேட்பாளர்கள் இருவராவது அரசியலில் நிலைத்து வெற்றியும் கண்டு இருப்பார்கள். தினகரன் ஜாதி பெரும்பான்மையான தேனீ தொகுதியில் தோல்வியடைந்தார். தஞ்சையில் வெற்றிபெறா விடில் அவர் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும் .


DARMHAR/ D.M.Reddy
மார் 21, 2024 03:31

வேறென்ன நடக்கும் . ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற ஆனந்த நடனம் .தான்.


rsudarsan lic
மார் 20, 2024 22:05

Definitely Dinakaran and OPS are going to eat awa6the credibility of the national party. They should have been branded corrupt and thrown away.


Arachi
மார் 20, 2024 21:55

ஏலம் போடுற நிலைமையில் பாஜக இருக்கு


J.Isaac
மார் 20, 2024 20:59

தோற்பது உறுதி இதில் என்ன பெருமை


Kuppan
மார் 20, 2024 20:23

சைபருக்கு பக்கத்துல எந்த / எத்தனை எண் போட்டாலும் மதிப்பு ஒன்றும் கூடாது, நீங்க போட்டுக்குங்க பாஸு உங்களுக்கு புடிச்ச நம்பரை.


Jysenn
மார் 20, 2024 20:17

Politics pesa teriyaatha ivanudan...


Narayanan Muthu
மார் 20, 2024 20:06

முழு தேங்காய் உருட்டிக்கிட்டுதான் இருக்கணும். ருசிக்க வாய்ப்பே இல்லை.


Krishnamurthy Venkatesan
மார் 20, 2024 19:41

2026 தேர்தலையும் மனதில் வைத்துக்கொண்டு கொடுத்திருப்பார்கள். கூட்டணி கட்சிகளுக்கு திமுக வை போல் கிள்ளி தரவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, சீட் கிடைக்காத உ .பி ஸ் தேர்தல் வேலையில் முழு மனதுடன் ஈடுபடுவார்களா?


sankaranarayanan
மார் 20, 2024 19:26

கேட்டதை கொடுத்துவிட்டார்கள் என்றால் என்ன அவர்கள் கிருஷ்ண பரமாத்மாவா? இப்படி சினிமாப்பாடலை பின்பற்றி அல்ப சந்தோசம் படலாமே தவிர நடப்பது வேறு


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை