உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பருவமழை கொட்டி தீர்த்தும் சொட்டு நீர் இன்றி 354 ஏரிகள்

 பருவமழை கொட்டி தீர்த்தும் சொட்டு நீர் இன்றி 354 ஏரிகள்

சென்னை: பருவ மழை கொட்டியும், 354 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட நிரம்பாததால், பாசனம் மற்றும் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 14,141 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில், 2,040; சிவகங்கையில் 1,459; மதுரையில், 1,340; புதுக்கோட்டையில் 1,132 ஏரிகள் உள்ளன. தமிழகத்தில், அக்டோபர் முதல் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது. இதன் வாயிலாக, 3,922 ஏரிகள் நிரம்பியுள்ளன; 3,187 ஏரிகள் நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ளன. அதேநேரத்தில், 2,337 ஏரிகள் 75 சதவீதமும், 2,695 ஏரிகள் 50 சதவீதம் வரையும் நிரம்பியுள்ளன. மேலும், 1,646 ஏரிகளில், 25 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பருவமழை இரண்டு மாதங்களுக்கு மேல் பெய்தும், 354 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. புதுக்கோட்டையில், 79, திண்டுக்கல் 64, நாமக்கல் 47, தர்மபுரி 29, சேலம், 32, திருச்சி 21, மதுரை 20, கரூர் 16, விருதுநகர் மாவட்டத்தில், 11 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால், இம்மாவட்டங்களில் பாசனம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை