உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 அமைச்சர்கள் பதவியேற்பு

செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 அமைச்சர்கள் பதவியேற்பு

சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்களும் உடனே ஒதுக்கப்பட்டன.தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்து மனோ தங்கராஜ், மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். புதிதாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது.புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, நேற்று மாலை 3:30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த கவர்னர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். கவர்னரிடம், துணை முதல்வர் உதயநிதியை அறிமுகம் செய்தார். அதன்பின் முதல்வரும், கவர்னரும் விழா மேடைக்கு சென்றனர்.தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. புதிய அமைச்சர்களாக இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், கா.மு.நாசர் ஆகியோர் வரிசையாக உறுதிமொழி, ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்து பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.புதிய அமைச்சர்கள் பதவியேற்றதும், கவர்னர் மற்றும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். இறுதியாக தேசிய கீதம் இசைக்க, மாலை 3:45 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதன்பின் அமைச்சர்கள் அனைவரும், கவர்னர் மற்றும் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.தமிழக அமைச்சரவையில் தற்போது முதல்வருடன் சேர்த்து, அமைச்சர்கள் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற முடியும்.புதிய அமைச்சர்கள் பதவியேற்றதும், உடனடியாக அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியானது. செந்தில் பாலாஜிக்கு, ஏற்கனவே அவரிடம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.விழாவில், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயலர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

2 அமைச்சர்கள் 'மிஸ்ஸிங்'

* புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், விமானம் தாமதம் காரணமாக, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜனும்; வெளிநாடு சென்றுள்ளதால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் பங்கேற்கவில்லை. பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்றார்* முதல்வரின் மனைவி துர்கா, அவரது சகோதரி ஜெயந்தி, துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகா, மகள் தன்மயா ஆகியோரும் பங்கேற்றனர்.

பணிகள் சிறப்பாக இருக்கும்

அமைச்சர் கோவி.செழியன் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள கோவி.செழியன் கூறுகையில், ''முதல்வர் தன் அமைச்சரவையில் எனக்கு இடம் கொடுத்துள்ளார்; அவருக்கு மனமார்ந்த நன்றி. எனக்கு ஒதுக்கிய துறையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் வகையில் என் பணிகள் இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

xyzabc
அக் 04, 2024 12:40

ரவி அவர்களுக்கு தர்ம சங்கடமான வேலை


sankaran
அக் 02, 2024 16:24

நான் அடித்து சொல்கிறேன்...2026 தேர்தலிலும் தீயமுகதான் வெற்றி பெரும்...


xyzabc
அக் 01, 2024 12:59

Justice tem has failed. evil side of democracy prevails. Dravidians are getting done anything they want. Still they will not stop crying to make fool of the voters.


என்றும் இந்தியன்
செப் 30, 2024 17:28

துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு???பிணை முதல்வர் தான் சரியான பதவி


என்றும் இந்தியன்
செப் 30, 2024 17:22

குழந்தாய் எனக்கு ஒன்று புரியவில்லை செந்தில் பாலாஜி விடுதலை ஆகி வந்தாரா இல்லை ஜாமீனில் இருக்கின்றாரா??விடுதலை ஆகி வந்தால் அவர்மீது வழக்கு இல்லை என்று பதவி கொடுப்பது ஓகே???அவர் வந்திருப்பது வீரும் ஜாமீனில், இன்னும் வழக்கு முடியவில்லை அப்புறம் எப்படி பதவி ஒடுக்கலாம்?? ஓஹோ இது தான் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் சித்தாந்தமா???அப்போ சரி


Thirumal Kumaresan
செப் 30, 2024 16:54

கேவலம் தமிழ்நாட்டுக்கு


Rengaraj
செப் 30, 2024 16:49

ஜாமீன் என்பது சிறையில் இருப்பதற்கு பதிலாக வெளியில் இருக்கலாம் என்பதே. அவர்மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நடக்கின்றன. ஆனால் அவர் குற்றவாளி என்று ஊர்ஜிதமாகவில்லை, அதனால் அவருக்கு மந்திரி பதவி தருவதில் தவறில்லை என்று வாதம் ஆட்சியாளர்களால் வைக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் கூட இதை ஆட்சேபிப்பதில்லை. தார்மீக ரீதியாக , மனச்சாட்சி மற்றும் உளச்சான்றுடன் இதை அணுகவேண்டும் என்று சட்டம் வெளிப்படையாக சொல்வதில்லை. திருட்டோ கொலையோ , ஒரு குற்ற செயல் புரிந்த ஒருவர் தண்டனை பெற்று தண்டனைக்காலம் முடிந்து வெளியில் இருந்தாலும் , ஒரு ஏரியாவில் தடை உத்தரவு , மற்றும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறக்கூடாது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணங்களால் அவ்வப்போது காவல் நிலைய விசாரணைகளுக்கும் அழைக்கப்படுவதுண்டு. அவரால் ஏதும் நிகழலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு இருப்பதால் இவ்வாறு செய்வது , விசாரணைக்காக சிறையில் வைக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் நடக்கும். ஒரு சாதாரண நபருக்கே காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்போது , ஜாமீனில் வெளிவந்த ஒருவருக்கு மந்திரி பதவி கொடுப்பது தார்மீக அடிப்படையில் நியாயமாக இருக்குமா ? மந்திரியாக அவர் செய்யும் பணிகள் அனைத்தும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்குமா ? அவர் மனசாட்சிப்படி , உளச்சான்றின்படி நியாயமாக தான் நடப்பார் என்பதற்கு உத்தரவாதம் யார் அளிப்பார் ? முதல்வருக்கு இந்த உத்தரவாதத்தை யார் அளித்தார்கள் ? அதுவும் காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வரே தியாகி என்று அவரை பாராட்டுவது எந்தவிதத்தில் நியாயமாக இருக்கமுடியும் ? அரசியல் அமைப்பில் சட்டம் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் பார்க்கும் என்று சொல்கிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா ? ஒரு ருபாய் திருடினாலும் குற்ற சட்டமும் தண்டனை சட்டமும் அவனை திருடன் , குற்றவாளி என்றுதான் சொல்கிறது. இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது குற்றம் புரிந்தவர்களை விட பல்வேறு ஓட்டைகளை கொண்டுள்ள சட்டத்தை வரைந்தவர்களே மிகவும் தவறு செய்தவர்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.


Yaro Oruvan
செப் 30, 2024 23:11

அது மட்டுமல்ல.. பத்து ரூவா மீது ஊழல் குற்ற ஆட்டு சாட்டு வைத்ததே சர்வாதிகாரிதான்.. அதெல்லாத்தையும் லப்பர் வச்சி அழிச்சிட்டாரு போலருக்கு விடியல்..


வைகுண்டேஸ்வரன்
செப் 30, 2024 16:42

இது எப்படி இருக்கு?


Appan
செப் 30, 2024 16:29

திமுக செந்தில் பாலாஜி போன்றோருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தால் கட்சி அழிந்து விடும் .மக்களின் எண்ணம் என்ன என்று அறிந்து செயல் பாட்னும் ..இப்போ சோசியல் மீடியா மிகவும் சக்தி வாய்ந்தத்த செயல் படுகிறது ..சமூகத்தால் உழல்வாதி என்று பார்க்கப்படும் நபருக்கு இப்படி பதவி கொடுத்து ஆட்டம் போடுவது அரசியலுக்கு அழகல்ல ..இந்த செயல் எதை காட்டுகிறது .அதிகாரத்தின் அகந்தையை காட்டுகிறது ..கெட்ட காலம் கெட்ட புத்தி ...விதி யாரை விட்டது .


வைகுண்டேஸ்வரன்
செப் 30, 2024 16:09

துணை முதல்வர் ஆக நாலு சினிமா படத்தில் நடித்து நாலு சினிமா படம் தயாரித்தால் போதும் , திமுகவில், நொடி பொழுதில் அமைச்சராக ஆக்கி விட மாட்டார்கள். தேர்தலில் போட்டியிட வேண்டும். எம் எல் ஏ வாக வெற்றி பெற வேண்டும். அப்புறம் தான் இதெல்லாம். பிஜேபி யில், நிர்மலா, ஜெயசங்கர் எல்லாம் அமைச்சர் ஆனா மாதிரி ஆக முடியாது. முருகன் மாதிரி, மக்களால் தகுதியற்றவர் என்று விரட்டப்பட்டாலும், நொடி பொழுதில் பிஜேபி அமைச்சராக ஆக்கிவிடுகிற மாதிரி யும் திமுக வில் முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை