உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 ஜோடி வேட்டி, சட்டையை வைத்து கொள்ளுங்கள்: கட்சியினருக்கு மாஜி அமைச்சர் வேண்டுகோள்

4 ஜோடி வேட்டி, சட்டையை வைத்து கொள்ளுங்கள்: கட்சியினருக்கு மாஜி அமைச்சர் வேண்டுகோள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அன்னவாசலில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:நம் தலையை அடமானம் வைத்தாவது பழனிசாமியை முதல்வராக ஆக்குவோம். தி.மு.க.,வால் மக்கள் நான்காண்டுகள் வேதனை அடைந்ததும், துன்பப்பட்டதும் போதும். தாலிக்கு தங்கம் இல்லாமல் வாடியது போதும். லேப்டாப் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டது போதும்.தி.மு.க.,வை ஓரங்கட்டி அ.தி.மு.க.,விற்கு வழி விடுங்கள் என்று மக்கள் கூறத் துவங்கி விட்டனர். விரைவில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். அதன்பின், காவிரி - வைகை - குண்டாறு திட்டப்பணிகள் துவங்கும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். லேப் - டாப் வழங்கும் திட்டம் துவங்கும். மக்கள் நிம்மதியாக வாழ்வர்.எல்லாருடைய மனதிலும் ஏக்கம் இருக்கிறது; எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்போதே, இரண்டு பச்சை இங்க் பேனாக்களை வாங்கி வைத்து விடுங்கள். ஒன்று -- எனக்கு. மற்றொன்று, உங்கள் ஒவ்வொருவரையும் மக்கள் பிரதிநிதிகளாக, கூட்டுறவு தலைவர்களாக, உறுப்பினர்களாக, இயக்குனர்களாக ஆக்குவதற்கு; இந்த டீல் ஓகேவா?அ.தி.மு.க., நிர்வாகிகள், நான்கு வேட்டி, நான்கு சட்டையை சலவை செய்து வைத்துக் கொள்ளுங்கள்; 2026ல் நம் கட்சி பதவி ஏற்பு விழாவிற்கு போவதற்கும், தி.மு.க., ஆட்சியை விரட்டியடிப்பதற்கும் இன்னும் ஒரு தீபாவளி மட்டுமே உள்ளது. அதுவரை பொறுமையாக இருங்கள்; தைரியமாக இருங்கள்; தெம்பாக இருங்கள். வரும் 2026ல் அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை