உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாட்டு சுற்றுப்பயணம்; வெள்ளை அறிக்கை தந்தே ஆகணும்; கேட்கிறார் இ.பி.எஸ்.,

வெளிநாட்டு சுற்றுப்பயணம்; வெள்ளை அறிக்கை தந்தே ஆகணும்; கேட்கிறார் இ.பி.எஸ்.,

சென்னை: 'நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த தி.மு.க., முதல்வர் ஸ்டாலின் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து குறைவான முதலீட்டை முதல்வர் ஸ்டாலின் ஈர்த்துள்ளார். மற்ற மாநில முதல்வர்கள் ஈர்த்ததை விட மிக மிக குறைவான முதலீட்டை கொண்டு வந்துள்ளார். நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ரூ.18,000 கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. 40 மாத தி.மு.க., ஆட்சியில் ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் மாநாட்டிற்கு வந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து GIM 2019 நடத்தியதாக கேலி பேசினார். ஆட்சியாளர்கள் மாறினாலும் அதிகார வர்க்கம் அப்படியேதான் இருக்கும். ஆட்சி அமைப்பு நிரந்தரமானது ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறக்கூடியவர்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
செப் 23, 2024 20:59

சமீபத்தில் தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று அங்கு முதலீடு திரட்டும் அந்த இரண்டுவாரமும் செய்திமேல் செய்தி, முதல்வர் இவ்வளவு கோடி முதலீடு திரட்டிவிட்டார், தமிழகத்தில் மாபெரும் தொழில் புரட்சி என்று. ஆனால் அவர் தமிழகம் திரும்பியவுடன் அதைப்பற்றி ஒரு செய்தியும் இல்லை. கப்சிப். ஏன் இந்த மவுனம். முதலீடு ஒன்றும் எதிர்பார்த்த அளவுக்கு தேறவில்லையா ??? கிடைத்த முதலீடு எங்கே? எவ்வளவு?


Nallavan
செப் 23, 2024 13:53

கொடைக்கானல் கொலை வழக்கு மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு வெள்ளை அறிக்கை தந்தால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு வெள்ளை அறிக்கை தருவோம்


SUBRAMANIAN P
செப் 23, 2024 13:46

என்னது தந்தை ஆகணுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை