உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது

தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது

மதுரை: மதுரை கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நான்கு வயது குழந்தை ஆருத்ரா பலியான சம்பவம் தொடர்பாக, பள்ளி உரிமையாளர் திவ்யா கைது செய்யப்பட்டார்.மதுரை கே.கே.நகர் பகுதியில், ஸ்ரீ ஹிண்டர் கார்டன் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது 4 வயது சிறுமி, திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தாள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zrze4yj6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=030 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீர் தொட்டியில் பரிதவித்த சிறுமியை, அங்கிருந்தவர்கள் மீட்டனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தாள்.இந்த சம்பவம் தொடர்பாக, மழலையர் பள்ளி ஆசிரியர்களிடம் மதுரை மாநகர துணை கமிஷனர் அனிதா விசாரணை நடத்தினார். இதில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி உரிமையாளர் திவ்யா பத்ரிலட்சுமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பள்ளிக்கு சீல்

பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால், குழந்தை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு சீ்ல் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

subramanian
மே 01, 2025 11:00

விக்கிரவாண்டி கிறிஸ்தவ பள்ளியில் குழந்தை இறந்த போது, இதுவரை ஏன் கைது செய்யவில்லை? என்னடா திராவிட மாடல்? இந்து என்றால் கைது? முஸ்லிம் கிறிஸ்தவ என்றால் வாயை மூடிக் கொண்டு இருப்பது? சட்டபடி ஆட்சி செய்யவில்லையே...ஸ்டாலின்


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 29, 2025 19:18

மத மைனாரிட்டிகள் நடத்துற இசுகூலு இல்லையே நம்மாளுங்க பள்ளியாச்சேன்னுதான் சேத்தாங்க. இதுவும் பொறுப்பற்றதா இருக்குனு இப்பத்தானே தேரியுது தெரியுது. சமீபத்துல இதேபோல தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு குழந்தை இறந்த செய்தி வந்ததே. அதன் பிறகும் இந்த பள்ளிகள் உஷாராகலையே. அரசு நிர்வாகம் வழக்கம்போல அனுமதியின்றி நடந்த பள்ளின்னு சொல்லி தப்பிக்கப் பாக்குது. மழலையர் பள்ளியில் சேர்த்துள்ள பெற்றோர் அந்த பள்ளிகள் அரசு அனுமதி பெற்றிருக்கிறதான்னு கேட்டு மாவட்ட கலெக்டருக்கு போஸ்ட் கார்ட் போடணும். கோர்ட்டுதான் தாமாக முன்வந்து கல்வித்துறை அதிகாரிகளை குடையணும்.


என்றும் இந்தியன்
ஏப் 29, 2025 16:24

ஆகவே இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் உங்கள் பள்ளிக்கு வெளியே கிறித்துவ பள்ளி முஸ்லீம் மதரஸா என்று எழுதி வையுங்கள் உங்கள் மீது ஒரு நடவடிக்கை எடுக்காது இந்த திராவிட அறிவிலி மடியல் கிறித்துவ முஸ்லீம் அரசு. இந்த குழந்தை பலியில் உள்ள தவறுகள் 1 திறந்த தொட்டி பள்ளியின் தவறு 2 குழந்தைகள் திறந்த தொட்டியின் அருகே ஏன் விளையாடினர் அது குழந்தைகளின் தவறு 3 அந்த குழந்தை தனியாக விளையாடிக்கொண்டிருந்ததா அப்படியென்றால் அது அந்த குழந்தையின் தவறு 4 அந்த குழந்தையுடன் வேறு குழந்தைகள் விளையாடினாரா அப்படியென்றால் அந்த குழந்தைகள் ஏன் பெரியவர்களிடம் சென்று உதவிக்கு சொல்லவில்லை. ஆகவே பள்ளி உரிமையாளரை மட்டுமே குறை சொல்வது சரியானது இல்லை


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 29, 2025 16:12

பலி, கைது, விசாரணை எல்லாம் சரி. பள்ளியை ஏன் மூடவேண்டும்? தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு, சில நாட்கள் கழித்து மற்ற குழந்தைகள் தொடர்ந்து படிக்க அனுமதிக்கலாமே?


raja
ஏப் 29, 2025 13:58

நடந்த நிகழ்வு வருந்த தக்கது .. பள்ளி தாளாளர் கைதும் சரியே.... ஆனால் இது கேடுகெட்ட விடியல் ஆட்சியாக இருப்பதால் தவறு செய்த இந்த இந்து பள்ளியின் தாளாளர் உடனே கைது..இதுவே திருட்டு திராவிட விடியல் ஆட்சிக்கு பிச்சை போட்டவர்கள் பள்ளியை இருந்திருந்தால் அந்த குழந்தை மூடி இருந்த தொட்டியின் மூடியை திறந்து விழுந்து விட்டது தவறு குழந்தையின் மேல தான் என்று கேசை மூடி இருப்பார்கள் ..


Rajinikanth
ஏப் 29, 2025 14:35

என்னடா நீங்க? இது மாதிரி எந்த செய்தியா இருந்தாலும், அதுல இது மாதிரி இருந்தா அவங்க அப்டி பண்ணி இருப்பாங்கனு ஒரு கற்பனைய சேத்து சொல்றது?


sundar
ஏப் 29, 2025 14:40

கற்பனை அல்ல நிஜம் தான். நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 4 மாணவர்கள் பலி. அந்தப் பள்ளியை மூடணும்னு யாரும் முக்கவோ மொனகவோ இல்ல.


Ganapathy Subramanian
ஏப் 29, 2025 14:53

இதே போன்றொதொரு சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத்தில் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்ற ஊரில் ஒரு கிருத்துவ பள்ளியில் நடந்தது. நடவடிக்கை எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும், அதையே திரு ராஜா அவர்கள் சொல்லியுள்ளார்.


raja
ஏப் 29, 2025 17:46

என் கருத்தில் எப்போதும் உண்மை இருக்கும்... இல்லை என்றால் கருத்தே எழுத மாட்டேன்...


Natchimuthu Chithiraisamy
ஏப் 29, 2025 13:49

இது மற்ற அனைத்து பள்ளிகளுக்கு பாடமா இருக்கலாம் இல்லை செய்தியாக கூட போகலாம்


Ramesh Sargam
ஏப் 29, 2025 13:41

இன்று கைது. நாளை அரசியல்வாதிகளின் சிபாரிசில் மீண்டும் பணியில் இருப்பார். இறந்த குழந்தையின் குடும்பத்து ஏதாவது ஒரு சில ஆயிரங்களை நிவாரணமாக கொடுத்துவிட்டு, பள்ளி மீண்டும் சிறப்பாக செயல்படும். அப்பவும் அந்த திறந்து கிடக்கும் தண்ணீர் தொட்டியை மூடமாட்டார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 13:31

மத மைனாரிட்டிகள் நடத்துற இசுகூலு இல்லையோ ??


sridhar
ஏப் 29, 2025 14:21

அதனால் தான் உடனடி கைது .


VSMani
ஏப் 29, 2025 13:25

இந்த மாதிரி பொறுப்பற்ற பள்ளிகளில் ஒருவரும் தங்கள் பிள்ளைகளை சேர்க்கக்கூடாது. அப்போதுதான் இப்படிப்பட்டவர்களுக்கு புத்தி வரும்.


புதிய வீடியோ