உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிக்கு 400 தோப்புக்கரணம்; ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

மாணவிக்கு 400 தோப்புக்கரணம்; ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ்.எஸ்.கோட்டை திருமாநகரைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:கடந்த 2017ல், எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், என் மகள் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளி தமிழ் ஆசிரியர் சித்ரா, என் மகள் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை எனக்கூறி, 2017 அக்டோபர் 24ம் தேதி, 200 முறையும், மறுநாள், 400 முறையும் தோப்புக்கரணம் போட செய்துள்ளார்.சோர்ந்துபோய் வீட்டுக்கு வந்த மகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. என் மகளை பரிசோதித்த டாக்டர், பலமுறை தோப்புக்கரணம் போட்டதால், உள் உறுப்பு கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஆசிரியர் சித்ராவின் மனிதாபிமானமற்ற தண்டனையால், என் மகள் உடல், மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார். எனவே, ஆசிரியர் சித்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.இதை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:ஏழாம் வகுப்பு மாணவியை தோப்புக்கரணம் போட வைத்தது தொடர்பாக விளக்கம் அளிக்க, ஆசிரியை சித்ராவுக்கு பலமுறை வாய்ப்பு அளித்தும், வேண்டுமென்றே அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை; பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.ஆணையம் நடத்திய விசாரணையில், மாணவியை இரண்டு நாட்கள் தோப்புக்கரணம் போட வைத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெளிவாகிறது. எனவே, மாணவியின் தாய் பாண்டிச்செல்விக்கு, தமிழக அரசு இழப்பீடாக, 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஏப் 24, 2025 11:15

ஆசிரியை செய்தது தவறு. அவரிடமிருந்து 2 லட்சம் வசூல் பண்ணிட்டு பணி நீக்கம் செய்யுங்க.


Ragupathy
ஏப் 24, 2025 08:25

400 தோப்பு கரணம் போட வைத்திருப்பாரா என்பது சந்தேகமே... 400என்பது கண்டனத்திற்குரியது... மாணவர்களுக்கு தண்டனை தர பெற்றவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சமூகம்....சில ஆசிரியர்களின் மூர்க்கத்தனம்.... இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறது...


m.arunachalam
ஏப் 24, 2025 07:08

உருப்படாத சமூகத்தை போட்டி போட்டு உருவாக்குகிறோம். யாருக்கு எதை நிரூபிக்க இந்த முடிவு? தெளிதல் நலம் .


மணி
ஏப் 24, 2025 05:22

ஆசிரியை செய்தது சரியே


வாய்மையே வெல்லும்
ஏப் 24, 2025 08:29

ஆசிரியையின் காசில் கொழுத்து பிழைத்தவன் பிதற்றல் பேச்சு . தெரியாமல் கேட்கிறேன் உங்கவீட்டு பெண்ணுக்கு இப்படி நடந்தால் வாய்கூசாமல் இப்படி சொல்ல இயலுமா ??


MUTHU
ஏப் 30, 2025 08:29

படிப்பது தானே வேலை. எதுக்கு வீட்டுப்பாடம் எழுதாமல் சென்றாள்.


மீனவ நண்பன்
ஏப் 24, 2025 03:12

மாணவர்கள் மது குடிப்பதால் டாஸ்மாக் அதிகாரிகள் தோப்புக்கரணம் போடவேண்டும்


வாய்மையே வெல்லும்
ஏப் 24, 2025 08:30

கேனத்தனமான கூற்று. எதற்கு எதை முடிச்சு போட்டு பார்க்க நினைக்கிறீர்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை