உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு டாக்டர்கள் நியமனத்தில் தகுதியில்லாத 400 பேர் பங்கேற்பு?

அரசு டாக்டர்கள் நியமனத்தில் தகுதியில்லாத 400 பேர் பங்கேற்பு?

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,642 டாக்டர்கள் நியமனத்தில், தகுதியில்லாத 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருப்பதால், மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிட்டு, வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என, தேர்வு எழுதிய டாக்டர்கள், அரசிடம் மனு அளித்துள்ளனர்.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக, 2,642 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வை, 24,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதினர்; அவர்களில், 14,855 டாக்டர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதில், 4,585 டாக்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. தகுதியான, 2,642 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.இந்நிலையில், டாக்டர் பணி நியமனத்தில் தகுதியில்லாதவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, தேர்வு எழுதியவர்கள், மக்கள் நல்வாழ்வு துறை செயலர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திற்கு மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து, தேர்வில் பங்கேற்ற டாக்டர்கள் கூறியதாவது:

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பின்படி, கடந்தாண்டு ஜூலை 15க்கு முன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, உதவி டாக்டர் பணிக்கு தகுதி பெற்றவர்கள். ஆனால், ஜூலை 15க்கு பின், பதிவு செய்த ஏராளமானோர் தேர்வில் பங்கேற்றனர். அதில், 400க்கும் மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதனால், தகுதியில்லாத டாக்டர்கள், பணியில் சேர வாய்ப்புள்ளது. தகுதியானவர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி, கடந்தாண்டு ஜூலை 15க்கு முன் பதிவு செய்த டாக்டர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, பணி நியமனம் வழங்கப்படுவர். தகுதியில்லாத டாக்டர்கள் உறுதியாக நியமிக்கப்பட மாட்டார்கள்.எனவே, தகுதியான டாக்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், தேர்வானவர்களின் விபரங்களுடன் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மோகனசுந்தரம் லண்டன்
பிப் 20, 2025 12:40

ஆட்சியாளர்களுக்கு ஒரு தகுதியும் இல்லை. இதில் டாக்டரை போய் என்ன சொல்ல. எல்லாம் கலிகாலம்.


அப்பாவி
பிப் 20, 2025 10:47

சாரி ப்ரோ... நிறைய பேர் ஏற்கனவே துட்டு குடுத்து டோக்கன் வாங்கி உள்ளே நுழைஞ்சுட்டாங்க. நாளைக்கி இவிங்களே துணை வேந்தர், டீன் பதவிக்கும் வந்துருவாங்க.


velan ayyangaar,Sydney
பிப் 20, 2025 07:00

நீட் வேண்டாம் போடா, மும் மொழி கொள்கை வேண்டாம் போடா.. இன்னும் பல ஆண்டுகள் இதே பல்லவி. நாமளும் நாளை நமதே 234 லும் நமதே...விளங்கிடும் உங்க மாடல்


karupanasamy
பிப் 20, 2025 06:48

மாறன் மகள் டாக்டர், வீராசாமி மகன் டாக்டர், கருவாடு மீனாகமாறிய காளிமுத்து மகன் டாக்டர், அதிமுக ஜெயக்குமார் மகன் டாக்டர் இந்த மாதிரியான அரசியல் அவலங்களுக்கு தமிழா இனஉணர்வுகொள் இந்த திணிப்பு என்று சொல்லி கொஞ்சம் சவுண்டு விட்டால் உணர்ச்சிவசப்பட்டு அங்கீகாரம் கொடுப்பான் தமிழன்


ஆரூர் ரங்
பிப் 20, 2025 11:14

அரசியல்வாதிகளது பிள்ளைகள் MD, DM படித்திருந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் வேலை கொடுக்கத் தயங்குகின்றனர். சொந்த மருத்துவமனை நடத்தினால் ஆட்சி மாறும் காலத்தில் ஆள்பவர்கள் தொல்லை குடுக்குறாங்க. இதனால்தான் சினிமாத் துறை அல்லது அரசியலுக்கு சென்று விடுகிறார்கள்.


shan
பிப் 20, 2025 06:37

விடியஆ அரசு ஆட்சியில் எல்லாமே நடக்கும் மத்திய அரசிடம் பிராடா காசு கேட்கும் முறையே சாட்சி


D.Ambujavalli
பிப் 20, 2025 06:30

அது என்ன , தேர்வு எழுத அனுமதித்துவிட்டு, ரிசல்ட்டும் வெளியிட்டு, வடிகட்டிய பிறகு மதிப்பெண் சரிபார்த்து நியமனம் செய்யும்போதுதான் குறிப்பிட்ட தேதிக்குப் பின் பதிவு செய்தவர்களை தகுதி நீக்கம் செய்வார்களா? தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை Applications வாங்கும்போதே கழிக்காமல் எவ்விதம் தேர்வு எழுத அனுமதித்தார்கள்? அந்த 400 பேர் மூலம் யார் யாருக்கு எவ்வளவு போயிற்றோ, கண்டுகொள்ளாமல் அனுபவித்துவிட்டார்கள். அதேபோல் நியமனத்துக்கு தனி rate பெற்று நியமித்துவிடுவார்கள் எல்லாத்துறைகளிலும் செ . பா க்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது


Kasimani Baskaran
பிப் 20, 2025 06:15

குறைந்தபட்சம் மருத்துவமே படிக்காத போலி மருத்துவர்களை அனுப்பாமல் இருக்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது இதைத்தான் சொல்கிறார்கள். சொல்வதற்கு நேர் மாறாக நடந்துகொள்வதுதான் அந்த மாடல்...


Ram
பிப் 20, 2025 05:41

இடவொதுக்கீடே ஒரு தகுதியற்ற நடைமுறை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை