உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வாக்காளர் பட்டியலில் சேர 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்

 வாக்காளர் பட்டியலில் சேர 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி, 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகம் முழுதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த மாதம் துவங்கியது. முதல் கட்டமாக, வீடுதோறும் வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன் அடிப்படையில், கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது, 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், தங்கள் பெயரை சேர்க்க, ஜன., 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் கடந்த இரு தினங்களாக சிறப்பு முகாம் நடந்தது. தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று முன்தினம் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி, 4 லட்சத்து 42,070 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கக்கோரி 7,741 விண்ணப்பங்கள் வந்துள்ளன. வரும் 3, 4ம் தேதிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை