| ADDED : ஜன 13, 2024 12:38 AM
சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு, 11ம் தேதி 1,250 பஸ்களும், 12ம் தேதி 1,600 பஸ்களும் இயக்கினோம். இன்று 1,600 பஸ்களை இயக்க உள்ளோம். இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ஆம்னி பஸ்கள், கோயம்பேட்டில் புறப்பட்டு வானகரம், பூந்தமல்லி, நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்று, பயணியரை ஏற்றிச் செல்லும். வடபழனி, தாம்பரம் மற்றும் பெருங்களத்துார் வழியாக, ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது. இருப்பினும், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புதுச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பஸ்கள், காவல் துறை அனுமதியுடன் வழக்கம் போல இயக்கப்படும். அன்பழகன்தலைவர், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்