உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 48 பேர் இடமாற்றம்

32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 48 பேர் இடமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஏழு மாவட்டங்களின் எஸ்.பி.,க்கள் உட்பட, போலீஸ் உயர் அதிகாரிகள் 48 பேர், நேற்று(ஜன.,08) இடமாற்றம் செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் எஸ்.பி.,யான டாக்டர் சுதாகர், சென்னை பரங்கிமலை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர், பதவி உயர்வுடன் வேலுார் டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டு உள்ளார்.விழுப்புரம் எஸ்.பி., சசாங் சாய், 'க்யூ' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அரியலுார் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, விருதுநகருக்கும்; ராமநாதபுரம் எஸ்.பி., தங்கதுரை, கிருஷ்ணகிரிக்கும் மாற்றப்பட்ட உள்ளனர். இவர்கள் உட்பட, போலீஸ் உயர் அதிகாரிகள், 48 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான லஞ்ச ஒழிப்பு துறை டி.ஐ.ஜி., லட்சுமி, சேலம் டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி, வேலுார் டி.ஐ.ஜி., முத்துசாமி, சென்னை தெற்கு போக்குவரத்து இணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோருக்கு ஜ.ஜி.,க்களாக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., திருநாவுக்கரசு, உளவுத் துறை பாதுகாப்பு பிரிவின் டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்கள் உட்பட, 16 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 08, 2024 12:54

ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரிகளை பந்தாடுகிறார் என்று வசை மொழி பாடிய இந்த கூத்தாடி ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டு களில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேல் Transfers and Postings ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை திராவிட மாடல் என்பது இதுதான் போல. இதற்கான காகித செலவே சில கோடிகளைத்தாண்டி இருக்கும்.


Sathyam
ஜன 08, 2024 11:26

ஒவ்வொரு துறையிலும் பங்களிப்பு உள்ளது. தயவு செய்து நமது வீரம் மிக்க ராணுவம் தங்கள் உயிரையும் பாதுகாப்பையும் எப்படி தியாகம் செய்கிறது என்பதை பாருங்கள் மோசமான நிலைமைகள் மற்றும் காலநிலை கொண்ட நமது எல்லைகள். அறிவியல், தொழில்நுட்பம், என ஒவ்வொரு துறையிலும் எங்களிடம் பங்களிப்பு உள்ளது. கைவினைஞர்களே, விவசாயம் என்று நீங்கள் பெயரிடுங்கள்.


Mani . V
ஜன 08, 2024 06:18

இந்த ஒரு வேலையத் தவிர இந்த எழவு மாடல் ஆட்சி வேறு எதையும் செய்ததில்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை