மேலும் செய்திகள்
தவெக விஜய்க்கு ராஜபக்சே மகன் வாழ்த்து
2 hour(s) ago | 1
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
9 hour(s) ago | 21
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கேயம், காளிவலசை சேர்ந்தவர் சோமசுந்தரம், 80, விவசாயி. இப்பகுதியில், அவருக்கு 30 ஏக்கர் நிலம் உள்ளது. மனைவி, இரு மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த, 26ம் தேதி மகனுக்கு பெண் பார்க்க, பழனிசாமி என்பவர் சோமசுந்தரத்தை அழைத்து சென்றார். அதன்பின், மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், காங்கேயம் போலீசில் புகார் கொடுத்தனர். தனிப்படை போலீசார் விசாரித்தனர். சோமசுந்தரத்தின் தங்கை மகன் கொற்றவேல், 50, குடும்பத்தினரிடம் விசாரித்தனர். சொத்து பிரச்னை தொடர்பான முன்வி ரோதத்தில், சோமசுந்தரத்தை கூலிப்படை வாயி லாக கொலை செய்தது தெரிந்தது.இதுதொடர்பாக, கொற்றவேல், 57, அவரது மனைவி விசாலாட்சி, 44, கூலிப்படையை சேர்ந்த ஈரோடு, வடபழனி சிதம்பரம், 38, உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:
கொற்றவேல் அபகரித்த 9 ஏக்கர் நிலத்தை, கோர்ட் வாயிலாக சோமசுந்தரம் பெற்றார். இதனால், கொற்றவேல் குடும்பத்தினர் கோபத்தில் இருந்தனர். சோமசுந்தரத்தை கொல்ல திட்டமிட்டனர். இதற்காக, தோட்டத்தில் வேலை செய்து வந்த பழனிசாமி, 58, என்பவருடன் ஆலோசித்தனர்.இருவரும், ஈரோடு மாவட்டம், வடபழனியில் கூலிப்படையை சேர்ந்த சிதம்பரம், 38, உள்ளிட்ட சிலரை, 5 லட்சம் ரூபாய் கொடுத்து பேசி தயார் செய்தனர். கடந்த, 26ம் தேதி மகனுக்கு பெண் பார்த்து வரலாம் என்று கூறி நம்ப வைத்த பழனிசாமி, சோமசுந்தரத்தை அழைத்து சென்றார். ஈரோட்டிலுள்ள ஒரு வீட்டில் வைத்து சோமசுந்தரத்தை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.சடலத்தை திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான வெங்கரையாம்பாளையம் நொய்யல் ஆற்றில் வீசி சென்றனர். இரு நாட்களாக சடலத்தை நொய்யல் ஆற்றில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடக்கிறது. தலைமறைவாக உள்ள பழனிசாமியை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
2 hour(s) ago | 1
9 hour(s) ago | 21