உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: ரயிலில் கேட்பாரற்று கிடந்த, 5 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் வழியாக செல்லும் ரயில்களில், கஞ்சா கடத்துவதை தடுக்க ஆர்.பி.எப்., மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று புதுடில்லி – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வரை சோதனை செய்தனர். அப்போது, பின்பக்க பொதுப்பெட்டியில், கழிப்பறை அருகே கேட்பாரற்று இருந்த பையை திறந்து சோதனை செய்தனர். அதில், 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை, சேலம் ரயில்வே போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் திலகவதி விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !