உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெரினா கூட்ட நெரிசலில் 5 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மெரினா கூட்ட நெரிசலில் 5 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தேவையான ஒத்துழைப்பையும், வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. இதற்காக தமிழக போலீசார், தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தது. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிக,மிக அதிகளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும் போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், போக்குவரத்தை பெறுவதிலும் சிரமம் அடைந்தனர். அடுத்த முறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் ஏற்பாடுகள் செய்யப்படும்.இந்நிகழ்வில் கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் விலைமதிப்பற்ற 5 உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து வேதனையும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

sundarsvpr
அக் 14, 2024 19:04

இயற்கையால் ஏற்பட்ட மரணங்களுக்கு உதவி செய்வது அரசின் கடமை. அரசு மெத்தனத்தால் ஏற்படும் விபரீதங்களுக்கு நிர்வாகம் செய்திடும் உதவிக்கு மக்கள் பணத்தை எடுக்கக்கூடாது. அரசு அமைச்சர்கள் அதிகாரிகள் தார்மீக பொறுப்பு உண்டு. இவர்களுக்கு ஏன் டோக்கன் தண்டனை கொடுக்கக்கூடாது.


xyzabc
அக் 10, 2024 04:19

பணம் எங்கிருந்து ? மத்திய அரசு பணமா ?


தமிழன்
அக் 08, 2024 15:48

நிர்வாக திறமையில் குறைபாடு உள்ள திமுக கட்சியை அடுத்த இருபது ஆண்டுகளுக்கு மக்கள் பணி செய்ய கூடாது அதற்காக தேர்தலில் போட்டியிட 20 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும்.


தமிழன்
அக் 08, 2024 10:58

Chief ஜஸ்டிஸ் என்றால் தலைமை நீதிபதி Chief செகிரேட்டரி தலைமை செயலாளர் Chief மினிஸ்டர் என்றால் ஏன் முதல்வர் என்று செய்தி போடுறீங்க.. தலைமை அமைச்சர் என போடுங்க.. அவுங்க ஒன்றியம் என சொல்வதை ஏற்றுக் கொள்ளும் தமிழ்நாடு இதை ஏன் செய்வதில்லை.. தலைமை அமைச்சர் என இனி சொல்லுங்கள் ?


தமிழன்
அக் 08, 2024 08:56

5 லட்சம் டாலரா


Jit Onet
அக் 08, 2024 00:21

காவல்துறை அமைச்சர் நீங்கதானே என்ன வேலை செய்தீங்க?


Shiva
அக் 07, 2024 21:05

கூலிங் கிளாஸ் போட்டுகினு பக்காவ இருந்த தலீவரே. எவன் செத்தா நமக்கென்ன?


M Ramachandran
அக் 07, 2024 20:45

இது என்ன கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவு கேஆஸுக்கு 10 லட்சம் இதற்கு 5 லட்சம். ஓ இவர்களால் ஒன்றும் அருமையான மில்லியய் என்ற நினைபோ


Ramesh Sargam
அக் 07, 2024 20:31

அதிக கூட்டம் வரும் என்று தெரியும். தெரிந்தும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் போனது உங்கள் தவறு. இப்பொழுது இறந்தவர்கள் குடும்பத்தினரின் வாயை அடைக்க நிவாரணம். போன உயிரை திரும்ப கொடுக்கமுடியுமா உங்களால். அது முடியாது. அட இனி வரும் நாட்களிலாவது இப்படி அதிக கூட்டம் சேரும் இடங்களில் அது விமான சாகச நிகழ்ச்சியாக இருக்கட்டும், கோவில் திருவிழாவாக இருக்கட்டும் அல்லது அரசியில் கூட்டமாக இருக்கட்டும், இனிமேலாவது போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்கள் உயிரை காப்பாற்றுவீர்களா... அல்லது உயிர் போகட்டும், நிவாரணம் கொடுத்து வாயை அடைக்கலாம் என்கிற எண்ணமா? என்னமோ போங்க... மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாத நீங்க இருந்தென்ன பயன்...?


தமிழன்
அக் 08, 2024 10:42

அடுத்த மூன்று தேர்தலுக்கு இந்த கட்சியை தடை செய்ய சொல்றீங்களா


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 07, 2024 19:54

அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் ..... கள்ளச்சாராயத்துக்கு பலியான உயிர்களை விட இந்த உயிர்கள் cheap ........ விடியலார் வெற்றிகரமான பிசினஸ்மேன் .... .


தமிழன்
அக் 08, 2024 10:45

அவர்களால் அரசுக்கு வருமானம் இவர்கள் தரும் வரி தம்மா துண்டு அதிலும் பாதி மத்திய அரசுக்கு.. யார் எவ்வளவு தருகிறார்கள் என்பதை பொறுத்து தான் எல்லாம்.. என்கவுண்டரில் செத்தால் வழக்கு இருக்குமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை