உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடப்பு சீசனில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல்

நடப்பு சீசனில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நடப்பு சீசனில் இதுவரை, 68,000 விவசாயிகளிடம் இருந்து, 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. அதில், 15,420 பேர் தலா ஒரு ெஹக்டேருக்கு கீழும், 6,284 விவசாயிகள் பத்து ெஹக்டேருக்கு அதிகமாகவும் நிலம் வைத்துள்ளனர்.மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.கடந்த செப்டம்பர், 1ல் துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசன், 2025 ஆகஸ்டில் முடிவடைகிறது. இந்த சீசனில் நேற்று வரை, 67,860 விவசாயிகளிடம் இருந்து, 4.95 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அதில், 47,601 விவசாயிகளின் வங்கி கணக்கில், 1,174 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. அரசுக்கு நெல் வழங்குவதில் சிறு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.அதன்படி, இதுவரை நெல் வழங்கிய மொத்த விவசாயிகளில், 15,420 பேர் தலா ஒரு ெஹக்டேருக்கு கீழ் நிலம் வைத்துள்ளனர்.மேலும், 14,217 பேர் ஒரு ெஹக்டேர் முதல், 2 ெஹக்டேர் வரையும்; 15,801 பேர் இரண்டு ெஹக்டேர் முதல் நான்கு ெஹக்டேர் வரையும்; 16,139 பேர் நான்கு ெஹக்டேர் வரையும்; 6,284 பேர் 10 ெஹக்டேருக்கு அதிகமாகவும் நிலம் வைத்துள்ளனர். ஒரு ெஹக்டேர்என்பது, 2.45 ஏக்கர்.

60,000 டன் பருப்பு

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், ரேஷன் கடைகளில் வழங்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது. அதன்படி, 2025 ஜனவரி, பிப்., மார்ச் மாதங்களில் வழங்க, தற்போது, 60,000 டன் பருப்பு, 6 கோடி லிட்டர் பாமாயில் வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை