உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் அமைக்க சென்னை அருகே 5 இடங்கள் தேர்வு

2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் அமைக்க சென்னை அருகே 5 இடங்கள் தேர்வு

சென்னை : சென்னை அருகே அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஐந்து இடங்களை அடையாளம் கண்டு, ஆய்வு நிறுவனங்கள், 'டிட்கோ'வுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அவற்றை, முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து, ஒரு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி உள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேலைக்காக மக்கள் வருவதால், அந்நகரங்களின் எல்லை பகுதிகள் விரிவடைகின்றன. அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், சுகாதாரம், பஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அரசுக்கு செலவு அதிகரிக்கிறது. இதனால், பெருநகரங்களின் விரிவாக்கம் நடப்பதை காட்டிலும், மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக, 'சென்னை அருகில், 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்கப்படும்' என, நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நகரில் குடியிருப்பு, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெறும். சர்வதேச நகரை உருவாக்க, இடத்தை தேர்வு செய்யும் பணியை, சி.பி.ஆர்.இ., மற்றும் ஜே.எல்.எல்., என்ற நிறுவனங்கள் வாயிலாக, 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில், ஐந்து இடங்களை அடையாளம் கண்டு, ஒப்பந்த நிறுவனங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியாவில், அதிக நகரமயமாக்கல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வருவதில், தமிழகம் முன்னணியில் உள்ளது. எனவே, மக்கள் இடம் பெயர்வதை தடுக்கவும், அனைத்து வசதிகளும், ஒரே இடத்தில் கிடைக்கவும், புதிய நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன. சென்னை அருகில் அடையாளம் காணப்பட்டுள்ள, ஐந்து இடங்கள் குறித்த ஆய்வு அறிக்கை, விரைவில் முதல் வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படும். அவரின் ஆலோசனைப்படி, விரைவில் ஒரு இடம் தேர்வு செய்யப்படும். அங்கு சர்வதேச நகரை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்கலாமா அல்லது வேறு ஏதேனும் முறையில் அமைக்கலாமா என்பது, முதல்வரின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்.. இவ்வாறு அவர் கூறினார். என்னென்ன வசதி இருக்கும்? சர்வதேச நகரில், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் பிரிவினருக்கு ஏற்ற வகையில், வீட்டு வசதி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, பணியிட வசதி, வணிக வளாகம், வங்கிகள், பூங்கா, பொழுதுபோக்கு வசதி உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். பசுமை மின்சாரம், குறைந்த மின்சாரத்தில் அதிக திறனில் செயல்படும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இப்புதிய நகரத்துடன், சென்னையை இணைக்கும் வகையில், சாலை, பஸ் வசதி, மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்றவையும் ஏற்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ராம்கி
ஆக 01, 2025 23:34

உலகிற்கு முதன் முதலில் ஜனநாயக முறையில் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் குடவோலை வாக்களிக்கும் முறை செயல்படுத்தப்பட்ட இடம் உத்திரமேரூர். தேர்தலில் நிற்பதற்கான தகுதிகள் இன்னபிற சட்டதிட்டங்கள் அதில் தெளிவாக உள்ளது. அந்த வகையில் இன்று தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் இன்று நமக்கு வாய்த்துள்ள அரசியல் தலைவர்கள் பலருக்கு தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள் என்று அது கூறுகிறது. உத்திரமேரூர் குடவோலை தேர்தல் இன்றைய நடைமுறைக்கு தடடையாக நிற்கிறது. ஆகவேதான் வேட்டு வைத்து விட்டார்கள்.


jaganathan
ஆக 01, 2025 15:26

எல்லா இடத்திலும் வளர்ச்சி ஆவது ஆனால் என் உத்திரமேரூர் மட்டும் வளர்ச்சி ஆக மாட்டேங்குது


KHAJA MOHIDEEN.E M
ஜூலை 30, 2025 16:51

எந்த ஒரு புதிய திட்டமும் சென்னையை சுற்றியே அமைய வேண்டுமா? தமிழகத்தில் வேறு இடங்களே இல்லையா ?


J.Isaac
ஜூலை 30, 2025 11:43

சென்னையை தவிர வேறே இடமே இல்லையா? தென்தமிழகத்தில் முழுவதும் எவ்வளவோ வறண்ட பகுதிகள் உள்ளனவே.


ஆரூர் ரங்
ஜூலை 30, 2025 11:18

ஒரு காலத்தில் சென்னையை சுற்றி 100 மைல் தூரம் ஏராளமான ஏரிகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போ மிச்சம் மீதி நீர்நிலைகளையும் ஒழிக்க சதி.


nv
ஜூலை 30, 2025 10:26

இன்னும் நிறைய கொள்ளை அடிக்க வழி!!


JEE
ஜூலை 30, 2025 09:59

சபரீசன் நிறைய நிலம் வாங்கி போட்ட இடத்தில் ப்ராஜெக்ட் அமைக்க வேண்டும், அப்பதான் முதல் குடும்பம் வாழ, பிழைக்க, கொள்ளை அடிக்க வசதியாக இருக்கும்


Jack
ஜூலை 30, 2025 09:15

ராமநாதபுரம் அருகே விளைச்சல் இல்லாத பகுதிகளில் சர்வதேச நகரம் அமைப்பதால் அந்த பகுதி முன்னேற்றம் பெரும்


D Natarajan
ஜூலை 30, 2025 07:48

g square தான் முடிவு செய்யும். இந்நேரம் எல்லா இடங்களும் அவர்கள் கைக்கு போயிருக்கும். வாழ்க தமிழ் நாடு


raja
ஜூலை 30, 2025 06:14

இந்த ஐந்து இடங்களுக்கு அருகில் ஓங்கோல் கோவால் புரா கொள்ளை கூட்டத்தின் ரெண்டு ஜியின் இடங்களும் அதன் பினாமி காசா கிரவுண்டின் இடங்களும் விற்பனைக்கு ரெடியா இருக்கும் பாருங்க ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை