உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி அருகே 5 பேர் கொலை: 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்

திருநெல்வேலி அருகே 5 பேர் கொலை: 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்

திருநெல்வேலி:வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூரில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ஒரு தரப்பில் நான்கு பேரும், இன்னொரு தரப்பில் ஒருவருமாக 5 பேர் கொலை செய்யப்பட்டனர். இதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூரை சேர்ந்தவர் சின்னத்துரை என்ற நவநீதகிருஷ்ணன் 38. விவசாயி. உப்பு வாணிய முத்தூரை சேர்ந்தவர் சிவனுபாண்டி. இரு தரப்பினருக்கு இடையே கோவில் கொடை, ஆடுகள் காணாமல் போய் திரும்பி வந்தது தொடர்பாகவும் முன்விரோதம் இருந்தது.

2009 மார்ச் 10ம் தேதி சிவன் பாண்டி மகன் குணசேகரன், தமது தம்பி சுப்பிரமணியனை சிலர் தாக்கியதை கண்டித்து கேட்க சென்றபோது, சின்னதுரை மற்றும் உறவினர்கள் அர்ச்சுனன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து குணசேகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்குணசேகரன் குடும்பத்தினர் சின்னத்துரை என்ற நவநீதி கிருஷ்ணன் தரப்பினர் வயலில் அறுவடையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.இரு தரப்பினரும் வயலில் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் சின்னத்துரை 38, அவரது அக்காள் பாண்டியம்மாள் 46, பாண்டியம்மாள் மகன் மணிகண்டன் 25, உறவினர் முத்துப்பாண்டி 30 ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சிலருக்கு அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது.இந்த இரண்டு கொலை சம்பவங்களும் திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், குணசேகரன் கொலை வழக்கில் மீதம் இருக்கும் குற்றவாளி அர்ச்சுனனுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். அந்த வழக்கில் கைதான மணிகண்டன் இறந்துவிட்டார்.சின்னத்துரை, பாண்டியம்மாள்,மணிகண்டன், முத்துப்பாண்டி ஆகிய நான்கு பேர் கொலை சம்பவத்தில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.அதில் மூன்று பேர் வழக்கு நடந்த போது இறந்து விட்டனர். மீதமுள்ள 10 பேருக்கு நான்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ 3500 அபராதம் விதித்தார்.இதில் உப்பு வாணியமுத்தூர் சொர்ண பாண்டி 60, முத்துப்பாண்டி 63, கருத்தபாண்டி 47, ஆறுமுக நயினார் 41, சுப்பிரமணியன் 36, முருகன் 41, மகாராஜா 42, கருத்தப்பாண்டி 50 , ஆதிமூலகிருஷ்ணன் 39 மாயாண்டி 84 ஆகியோருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

துரைக்குமார்
பிப் 24, 2025 20:03

இப்பவே தோராயமா 65,70 வயசு இருக்கும் போலிருக்கு. கழுசடைகளுக்கு ஆயுள் தண்டனையாம். ஆனா, இவிங்க ரவுடிங்களைத்தான் வெட்டி சாய்ச்சிருக்காங்க என்பது ஆறுதலான விஷயம்.


அப்பாவி
பிப் 24, 2025 20:00

தீர்ப்புகள் கேவலமா இருக்கு. இவனுங்க அடுத்த பொறந்த நாள் வரைக்கும் ஜெயில்ல இருந்தா அதிசயம்.


Sudha
பிப் 24, 2025 19:40

எண்ணி பதினாறு ஆண்டுகளில் தீர்ப்பு தரப்பட்டது மெய்சிலிர்க்கிறது. இந்த பதினாறு ஆண்டுகளில் எவ்வளவு கல்யாணம், கருமாதி நடந்திருக்கும், குடும்பங்கள் சம்பாதித்து கொண்டிருந்தனவா , பண்டிகைகள் கொண்டாடினார்களா , வக்கீல்கள் எவ்வளவு சம்பாதித்தார்கள் எத்தனை வீடு கட்டினார்கள்? அனைத்திற்கும் மேல் இருக்கவே இருக்கிறது மேல் முறையீடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை