உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுப்பிக்கப்பட்ட 50 ரயில் நிலையங்கள்; வரும் 19ல் திறக்கிறார் பிரதமர்

புதுப்பிக்கப்பட்ட 50 ரயில் நிலையங்கள்; வரும் 19ல் திறக்கிறார் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை, வரும், 19ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில், பயணியருக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில், 40 ரயில் நிலையங்கள் உட்பட, நாடு முழுதும், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி ஓராண்டாக நடந்து வருகிறது. பணி முடிக்கப்பட்டுள்ள, 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை, வரும், 19ம் தேதி, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைக்கிறார். தெற்கு ரயில்வேயில் புதுப்பிக்கப்பட்ட, பரங்கிமலை, சூலுார்பேட்டை, சாமல்பட்டி, சிதம்பரம், மன்னார்குடி,போளூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, விருத்தாசலம் உட்பட 13 ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றில், லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல, கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் முதல், 'ஏசி' மின்சார ரயில் சேவையையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஏப் 08, 2025 12:48

திருவண்ணாமலைக்கு ரயில் சேவை மிகவும் குறைவு. அதை அதிகப்படுத்தாமல் ரயில் நிலையத்தை அழகுபடுத்தி மேம்படுத்தி என்ன பிரயோஜனம்? அதி புத்திசாலிகள் நிறைந்த ரயில்வே துறை!


subramanian
ஏப் 08, 2025 19:28

வேணுகோபால், நீங்கள் போட்ட பதிவில் இதுதான் நல்ல பதிவு.


Ramesh Sargam
ஏப் 08, 2025 12:02

பெங்களூரில் உள்ள அதிகம் மக்கள் பயணிக்கும் அந்த கிருஷ்ணராஜபுரம் ரயில்வே நிலையத்திற்கு என்று விடிவுகாலம்?


sankaranarayanan
ஏப் 08, 2025 11:42

இனி புதிதாக விடப்படும் ரயில்களுக்கு கருணா- நிதி வரைவு வண்டி - தயாளு அம்மாள் விரைவு வண்டி உதயநிதி விரைவு வண்டி - இன்பநிதி விரைவு வண்டி - தயாநிதி விரைவு வண்டி - கனிமொழி விரைவு வண்டி என்று வைத்தால்தான் அந்த நிகழ்ச்சிகளில் எங்களது அப்பா கலந்து உரையாடுவார் இல்லையேல் ...


S Ramkumar
ஏப் 08, 2025 10:14

இதையே ஊர் ஊராக சென்று சேவை செய்து வரும் முதல்வருக்கும், உதவி முதல்வருக்கும் சொல்லலாமே. உங்கள் திராவிட மாடலில் மட்டும் முத்துவேலர், அஞ்சுகம், மு க, அண்ணா, பெரியார் என்று தோட்டத்துக்கெல்லாம் பெயர் வைக்கும் பொது எங்கே போனது


Thetamilan
ஏப் 08, 2025 08:54

அந்தந்த மாவட்ட நிர்வாகமே திறந்துகொள்ளலாமே. அனைத்திலும் அரசியல் விளம்பரம் தேடும் வியாபார விளம்பர அரசு. அனைத்தும் மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளையர்கள் செழித்ததின் சின்னமும் கூட.


N.Purushothaman
ஏப் 08, 2025 06:50

தமிழகத்தில் நடந்துள்ள புதுப்பிப்பு பணிகள் அனைத்தும் மாநில அரசால் செய்யப்பட்டது .... இப்படிக்கு லேபிள்வாளாஸ் ..


சமீபத்திய செய்தி