உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!

ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ம் தேதி நடந்தது. எதிர்பார்த்தபடியே லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடினர்.சிறிய நகரமான திருச்செந்தூர் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்று சுவாமி தரிசனத்திற்கு பிறகு பத்திரமாக மீண்டும் வழியனுப்பி உள்ளது. இதற்கு காரணம் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே போலீசாரால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் தான்.கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரடியாக களம் இறங்கினார். தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை டிஐஜி அபிநவ் குமார், திருநெல்வேலி டிஐஜி சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஒன்பது எஸ்.பிகள், 32 கூடுதல் எஸ்.பி.க்கள், 73 டிஎஸ்பிகள் 87 இன்ஸ்பெக்டர்கள் என 5500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.திருச்செந்தூருக்கு உள்வரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்துவதற்கு மைதானங்கள் தயார் செய்யப்பட்டதால் ஊருக்குள் வாகனங்கள் வரும் நெருக்கடி இல்லாமல் போனது. பெரும்பான்மையான பக்தர்கள் கூட்டம் கடற்கரைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். கூட்டம் ஆங்காங்கே நேரலையை பார்ப்பதற்காக எல் இ டி டிவிகள் அமைக்கப்பட்டிருந்தன. கும்பாபிஷேகத்தின் போது புனித நீர், ட்ரோன்கள் மூலமாக பக்தர்கள் முழுமைக்கும் தெளிக்கப்பட்டது.கும்பாபிஷேகம் முடிந்ததும் கூட்டம் அலைமோதிக்கொண்டு வெளியேற எத்தனிக்கும் நேரத்திலும் பெரிய தள்ளுமுள்ளு இல்லாமல் கூட்டம் கலைய துவங்கியது. பிக்பாக்கட்ள், திருடர்களை கண்காணிக்க வழக்கம் போல வெளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிய இடத்திலும் பெரிய அளவில் நகை பறிப்பு சம்பவங்கள் இல்லை. மொபைல், பர்ஸ், நகை காணாமல் போனதாக மொத்தமே நான்கு புகார்கள் மட்டுமே கோவில் போலீசுக்கு வந்துள்ளன.திருச்செந்தூர் கும்பாபிஷேகம் முடிந்த மறு தினம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திலும் இதே போல வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அங்கும் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரளும் பகுதிகளில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஆனால் தமிழகத்தில் போலீசாரின் திட்டமிட்ட முன்னேற்பாடு காரணமாக சம்பவம் எதுவும் இன்றி சிறப்பாக நடந்தது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
ஜூலை 09, 2025 22:06

புனித நீருக்கு பதிலாக கேன் தண்ணீர் டுரோன் மூலம் தெளித்ததாக காணொளி உலவுகிறது


Venkatesh
ஜூலை 09, 2025 18:38

சங் மைண்ட் வாய்ஸ் .. எரியுதடி மாலா..


venugopal s
ஜூலை 09, 2025 11:23

இது தான் உண்மையான முருக பக்தர்களின் நிகழ்ச்சி!


Mecca Shivan
ஜூலை 09, 2025 10:08

நிஜம்தான்.. எந்த ஒரு சிறு அசம்பாவிதமோ அல்லது மக்கள் குறை பட்டோ இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை . அமைச்சர் சேகர் பாபு கடைசிவரை கூட இருந்து சிறப்பாக நடைபெற்ற ஒரு நிகழ்வு .. பாராட்டுக்கள்


pmsamy
ஜூலை 09, 2025 09:38

தினமும் கும்பாபிஷேகம் பண்ண இந்திய சீக்கிரம் வல்லரசாயிடும் அதெல்லாம் எங்க புரிய போகுது


c.mohanraj raj
ஜூலை 09, 2025 07:41

எல்லாம் நாடகம் லட்சியம் திருச்செந்தூர் முருகன் பார்த்துக் கொள்வார் மதுரை முழுதும் மாநாட்டிற்கு ஒருத்தன் கூட வரவில்லை ஆனாலும் சிறப்பாக நடந்தது


NRajasekar
ஜூலை 09, 2025 07:05

குருவின் கடாஷம் தெய்வத்தின் அபரிமிதமான கருணை எதையும் சிறப்பாக நடத்தி கொடுக்கும்


venugopal s
ஜூலை 09, 2025 06:18

அப்படியும் தமிழக அரசை நேரடியாக பாராட்ட மனம் வரவில்லையே! எது எப்படியோ? வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் கிடைத்து விட்டது!


Kasimani Baskaran
ஜூலை 09, 2025 04:03

மதுரையில் கூட காவலர்கள் ஓரிருவர் மட்டுமே இருந்த முருகனுக்கு விழா எடுத்த பொழுது அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லையே... இலவசமாக 5500 காவலர்கள் முருகப்பெருமானை தரிசித்து இருக்கிறார்கள்.


Ramanujam Veraswamy
ஜூலை 08, 2025 23:03

Really worth emulating, in the midst several casualties in crowd management - recent past in the country.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை