57 துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம்
சென்னை:மாநிலம் முழுதும், 57 துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். தமிழகம் முழுதும் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கலால், சமூக பாதுகாப்பு திட்டம், நிலம் எடுப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் பணியாற்றும் துணை கலெக்டர் அந்தஸ்திலான, 57 அதிகாரிகளை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக, பல துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.