உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இஸ்ரேல் தொடர் தாக்குதல் ஒரே நாளில் காசாவில் 57 பேர் பலி

இஸ்ரேல் தொடர் தாக்குதல் ஒரே நாளில் காசாவில் 57 பேர் பலி

டெய்ர் அல் - பலாஹ்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியது. இந்த வான் வழி தாக்குதலில் ஒரே நாளில், 57 பேர் கொல்லப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ydwv1hjb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டிற்குள் புகுந்து தொடர் தாக்குதல் நடத்தியதுடன், 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், 50,752 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 1.15 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துள்ளது.முக்கிய நகரமான காசாவில் பள்ளிக்கூடம், அகதிகள் முகாம், மருத்துவமனை போன்ற இடங்களை தேர்வு செய்து வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. கான் யூனுசில் உள்ள மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டிருந்த ஊடக கூடாரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர். டெய்ர் அல் - பலாஹ் நகரில் உள்ள மருத்துவமனையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அகதிகள் கூடாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.காசா நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவுற்றதை அடுத்து, ஒரு மாதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக ஹமாஸ் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், பெரும்பாலான ட்ரோன்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ்வேள்
ஏப் 08, 2025 11:13

முதலைகளுக்கு இரக்கம் பார்க்கவேண்டிய தேவை இல்லை.


M Ramachandran
ஏப் 08, 2025 10:30

அங்கு ஜனத்தொகை மட்டும் குறைய மாட்டேன் என்கிறதே. அவர்களுக்கு பெருமளவில் மத சார்புநாடுகள் அள்ளி கொடுக்கின்றன.


Thetamilan
ஏப் 08, 2025 08:52

உலகின் முதல் ஐந்து வல்லரசு அல்லது பொருளாதாரத்தில் உள்ள மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லையா? அப்பாவி மக்கள் லச்சம் பேர் கொன்றுகுவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விஞ்சான ஜனநாயக உலகில் . கற்காலத்திலும் கூட இப்படி எதுவும் நடக்கவில்லை .


c.mohanraj raj
ஏப் 08, 2025 20:54

தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் பாடுபடுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை