உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 செ.மீ., மழைக்கே தண்ணீர் தேக்கம்: 20 செ.மீ., பெய்தால் சென்னை என்னவாகும்? கேட்கிறார் ராமதாஸ்

6 செ.மீ., மழைக்கே தண்ணீர் தேக்கம்: 20 செ.மீ., பெய்தால் சென்னை என்னவாகும்? கேட்கிறார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 6 செ.மீ., மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.அவரது அறிக்கை: சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ., அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ., மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ., மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.

வீண் விளம்பரம்!

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90% முடிவடைந்து விட்டன, 95% முடிவடைந்து விட்டன என்று ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. உண்மையான அக்கரையை களப்பணிகளில் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டியிருந்தால் 6 செ.மீ மழைக்கு சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது. எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும், எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும்.

அவநம்பிக்கை

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின் மீது அந்த நம்பிக்கை இல்லை என்பதையே பொதுமக்கள் தங்களின் கார்களை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும் நிறுத்தி வைத்திருப்பது காட்டுகிறது. ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை.எங்கள் கார்களை பாலத்தில் தான் நிறுத்துவோம் என்று கூறியிருப்பதன் மூலம் அரசின் மீதான அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது. வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் கார்களை நிறுத்தப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை. அதன் பொருள், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் கையாலாகத்தனத்தை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர் என்பது தான்.

களப்பணி

கார்களை நிறுத்தும் மக்களை மிரட்டியும், அபராதம் விதித்தும் அவற்றை அப்புறப்படுத்தும்படி அச்சுறுத்திய சென்னை போலீசார் மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்போது பாலங்களில் நிறுத்தப்படும் கார்களுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளனர். எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும். இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

M Ramachandran
அக் 15, 2024 19:39

தைலாவரத்தை மக்கள் நலனுக்கு திறந்து விடுங்கள் முடிந்தால் அவர்களுக்கு உறைவிடமும் சாப்பிடும் ஏற்படுத்தி கொடுத்தீர்கள் என்றால் உங்களை மனமார போற்றுவார்கள்...


morlot
அக் 15, 2024 17:33

Hello Ramdass sir,here at France for the past few months flooods are surrounding on many areas.French govt is unable to solve this problems.So tamilnadu is suffering only few days every year.


bgm
அக் 15, 2024 18:45

hello morlot, then why are you struggling in Paris always? come here and enjoy.


Anvar
அக் 15, 2024 19:48

நீங்க சென்னைக்கு திரும்ப வாங்க.அதான் இங்க ரெண்டு நாளல்ல எல்லாம் சரியாயிடும்.அங்க இருந்து ஏன் ரொம்ப கஷ்டப்படறீங்க


என்றும் இந்தியன்
அக் 15, 2024 16:22

சரியான கேள்வி ராமதாஸ்


அப்பாவி
அக் 15, 2024 16:00

தெரியுதுல்ல. ஓரமா திண்டிவனத்துல போய் உக்காந்துக்கோங்க.


raja
அக் 15, 2024 15:06

எங்கே அந்த பியுஸ் போனமானுஸ்


Anantharaman Srinivasan
அக் 15, 2024 15:06

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தைலாபுர பாதுகாப்பு தமிழகத்துக்கு உண்டு. மதுவிலும் மூழ்காது வெள்ளத்திலும் மூழ்காது. வாரிசு அரசியலை தவிர்த்து வருவதைப்போல் இதையும் செய்து காட்டுவேன். நம்புங்கள்.


Duruvesan
அக் 15, 2024 14:32

நாங்க பாதாள சாக்கடை போட்டோம் இல்ல, ஆக எல்லோருக்கும் விடியல்.


VASUDEVAN
அக் 15, 2024 14:30

4000 கோடி எண்ண ஆனது,சிறு மழைக்கு இந்த நிலைமை என்றால் என்ன solvathu


Natrayan
அக் 15, 2024 14:26

4000 godi


sridhar
அக் 15, 2024 13:30

95% முடிஞ்சி போச்சு , என்னது என்று கேட்காதீங்க .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை