உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை!

பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை!

சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜன.,17ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்திருப்பதன் மூலம், பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் இந்த வருடம் ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 15ம் தேதி திருவள்ளுவர் நாளாகவும், ஜன., 16ம் தேதி உழவர் நாளாகவும் கொண்டப்படுகிறது. இதையொட்டி, ஜன., 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன.,17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு வேலை நாளாக இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w25a2qhy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்பவர்கள், ஜன.,17ம் தேதி அரசு விடுமுறை கிடைக்காதா? என்று எதிர்பார்த்திருந்தனர். காரணம், 17ம் தேதி அரசு விடுமுறை கிடைத்தால், 18 மற்றும் 19ம் தேதிகள், சனி, ஞாயிறு ஆகும். இதனால் தொடர் விடுமுறையை சொந்த ஊர்களில் கழிக்கலாம். இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் ஜன.,17ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த விடுமுறை அறிவித்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 25ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bala
ஜன 04, 2025 19:49

விடுமுறைகள் ரொம்பவும் ஜாஸ்தி.


தமிழ்வேள்
ஜன 04, 2025 19:34

13ம் தேதி திங்கட்கிழமை தற்செயல் விடுப்பு...ஆக ஒன்பது நாட்கள் விடுமுறை... வெளங்கீரும்...ஆனால் சென்னை நெரிசல் இன்றி நிம்மதியாக இருக்கும்...


ஆரூர் ரங்
ஜன 04, 2025 19:32

எல்லாரும் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்டு ஆயிடுவாங்க


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 04, 2025 19:30

13 திங்கட்கிழமை வேலை நாளில் அரசு ஊழியர்கள் ஒருவரும் வேலை செய்ய மாட்டார்கள். 10 வெள்ளிக்கிழமை இரவே எல்லோரும் ஊருக்கு புறப்பட்டு விடுவார்கள். உண்மையில் 11 சனிக்கிழமை முதல் 19 ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 9 நாட்கள். ஒரு பயலும் வேலை செய்யமாட்டான்.


தவெக மயிலாப்பூர்
ஜன 04, 2025 19:22

அது சரி, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு யார் சிபாரிசு செய்வது ? அவர்கள் பொங்கல் கொண்டாட வேண்டாமா ?


thamizhan
ஜன 04, 2025 19:07

this is diversion for. current issue of anna university


ஆரூர் ரங்
ஜன 04, 2025 19:06

ஒரு முழு வாரமும் அரசு அலுவலகங்கள் இயங்காததால் பொது மக்களுக்கு எவ்வளவு இடைஞ்சல்கள்? அரசு ஊழியர்களை கையில் போட்டுக் கொண்டு குடும்ப ஆட்சியை நடத்தி ஆட்டைய போட கூடுதலாக விடுமுறை?


அப்பாவி
ஜன 04, 2025 18:38

ஓபி அடிச்சு சம்பாரிக்கும் அரசு, அரசு ஊழியர்கள். ஏற்கனவே துட்டு வெட்டுனாத்தான் காரியமே நடக்கும். இந்த 6 நாட்களில் அதுக்கும் வழியில்லை.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 04, 2025 19:32

லீவு விட்டால் இப்படி. லீவு எல்லாம் இல்லை. ஆபீசுக்கும் ஸ்கூலுக்கும் போங்க என்றால், இந்து விரோதி என்பார்கள். அரசுப் பணிக்கு முயன்று, கிடைக்காதவர்களின் வயித்தெரிச்சல். இந்த 6 நாட்களும் உழைக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பற்றியெல்லாம் யோசித்திருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள்.


சாண்டில்யன்
ஜன 04, 2025 20:50

ஓபி அடிச்சுன்னா என்ன அர்த்தம்? துட்டு இந்த நாட்களில் கிடைக்காதுன்னா மக்களுக்கு வேலை முடிஞ்சுடுமா? காத்திருந்து வெட்டத்தானே வேண்டும்? அப்பாவியா இருந்ததாலேதான் அரசு வேலை கிடைக்கவில்லை போலும் வயித்தெரிச்சல் காரனுக்கு வாழ்க்கையில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை