6 சிறப்பு ரயில்கள் சேவை ஜூன் வரை நீட்டிப்பு
சென்னை:தாம்பரம் - நாகர்கோவில் உட்பட ஆறு சிறப்பு ரயில்களின் சேவை, ஜூன் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:நாகர்கோவில் - தாம்பரம் இடையே, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், மே, 11 முதல் ஜூன், 1 வரையும், தாம்பரம் - நாகர்கோவிலுக்கு திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், மே, 12 முதல் ஜூன், 2 வரையும் நீட்டித்து இயக்கப்படும் தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு இடையே, வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், மே, 9 முதல், 30 வரையும், திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், மே, 11 முதல் ஜூன், 1 வரையும் நீட்டித்து இயக்கப்படும்திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், மே, 11 முதல் ஜூன், 1 வரையும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலிக்கு திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், மே, 12 முதல், ஜூன் 2 வரையும் நீட்டித்து இயக்கப்படும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.