உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரானில் தென் மாவட்ட மீனவர்கள் 6,000 பேர்; கலெக்டரை சந்தித்த நயினார் நாகேந்திரன்

ஈரானில் தென் மாவட்ட மீனவர்கள் 6,000 பேர்; கலெக்டரை சந்தித்த நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈரானில் உள்ள தென் மாவட்ட மீனவர்கள் 6,000 பேரின் தகவல்களை சேகரிக்குமாறு கலெக்டரை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே போர் நிலவும் இவ்வேளையில், ஈரான் நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் அவர்களைப் பற்றியான தகவல்களை சேகரித்திட இன்று முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டரைச் சந்தித்து கலந்தாலோசித்தேன்.மேலும், இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடமும் முறையிட்டு நமது இந்திய மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டு வர தமிழக பா.ஜ., உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ