ஊர்க்காவல் படையில் 64 திருநங்கையர்
சென்னை: ஊர்க்காவல் படையில் சேர முன்வந்துள்ள, 64 திருநங்கையரின் விண்ணப்பங்கள், காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்ற தமிழக அரசின் முன்னெடுப்பின் படி, ஊர்க்காவல் படைக்கு திருநங்கையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, உரிய உடல் தகுதி பயிற்சி அளிக்கப்பட்டு, போக்கு வரத்து, மேலாண்மை, கூட்ட நெரிசல் உள்ளிட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். தேர்வுச் செய்யப்படுவோருக்கு, 'ஹோம் கார்டு' வீரர்களுக்கு இணையான சீருடை மற்றும் ஊதியம் வழங்கப்படும்.