உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் 6,862 கொலைகள்; குடும்ப சண்டையால் உருண்ட தலைகளே அதிகம்

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் 6,862 கொலைகள்; குடும்ப சண்டையால் உருண்ட தலைகளே அதிகம்

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில், 6,862 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தகாத உறவு, காதல் விவகாரம், குடும்பத் தகராறு காரணமாகவே அதிக கொலைகள் நடந்துள்ளன.தொழில் போட்டியில், ரவுடிகள் பழிக்கு பழியாக கொலை செய்யப்படுவர். கிராமங்களில் சொத்து தொடர்பான கொலைகள் நடக்கும். ஆனால், தற்போது சாதாரணமாக பேசி தீர்க்க வேண்டிய பிரச்னைகளுக்கு எல்லாம் கொலைகள் நடக்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ntm98rcr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த கொலைகள் குறித்து, காவல்துறை அதிகாரிகள் தகவல்களை திரட்டி உள்ளனர். அவற்றை, மதம் மற்றும் ஜாதி ரீதியாக முன்விரோதம் ஏற்பட்டு நடந்த கொலைகள், ரவுடிகள், நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் மற்றும் அரசியல் ரீதியாக நடந்த கொலைகளை வகைப்படுத்தி உள்ளனர் .அதேபோல, மனநோயாளிகள் கொலை மற்றும் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட மன நோயாளிகள் எத்தனை பேர் என்ற விபரங்களையும் திரட்டி உள்ளனர். வரதட்சணை, காதல் விவகாரம், பாலியல் தொல்லை, தகாத உறவு, குடும்ப சண்டை, வாய்த் தகராறு, தொழில் போட்டி காரணமாக நடந்த கொலைகள் குறித்தும் காவல் துறை வழக்குகள் பதிவு செய்துள்ளது.பணம் கொடுக்கல் வாங்கல், நில பிரச்னை, சொத்து அபகரிப்பு, முன்விரோதம், குடிபோதை மற்றும் காரணங்கள் கண்டுபிடிக்க முடியாத வகையில் நடந்த கொலைகள் பற்றிய விபரங்களையும் சேகரித்து உள்ளனர். அந்த வகையில், ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில்,6,862 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கொலைகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ததில், ஒவ்வொரு ஆண்டும் குடும்ப பிரச்னை காரணமாக, 400க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அதேபோல, தகாத உறவு காரணமாக, குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டிலும், 150 - 160 கொலைகள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.ஆபாசமாக திட்டி, வாய்த் தகராறில் ஈடுபட்டதால் குறைந்தபட்சம், 340 கொலைகள் நடந்துள்ளன. குடும்ப சண்டையால் நடந்த கொலைகள் தான் முன்னணியில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Padmasridharan
அக் 18, 2025 21:19

எல்லாத்துக்கும் பணம்தான் காரணம். நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க கணவனும் மனைவியும் சென்று விடுவதால் யார் யாரோ யாருக்கு யாரோனு தொடர்புகள் அதிகமாயின. காக்கி உடை காவலர்களும் இதிலடக்கம்


lana
அக் 18, 2025 17:31

தாஸ்மாசி 24 மணி நேரமும் கிடைக்கும். போதாக்குறைக்கு போதை வஸ்து வேற. பள்ளியில் ஒழுக்கம் நீதி போதனை இல்லை. பாடத்தில். பிறகு என்ன அரசுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை...


Indian
அக் 18, 2025 14:30

ஓரவஞ்சனை பிடித்த ப ஜா ஆளும் வரை இந்தியா முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லை .


RAMESH KUMAR R V
அக் 18, 2025 12:25

கடுமையான சட்டங்கள் நடைமுறைபடுத்தவேண்டும்


Iyer
அக் 18, 2025 11:24

பள்ளி கல்லூரிகளில் யோகா, தியானம் பிராணாயாமம் சூரியநமஸ்காரம் கட்டாய பாடமாக்கினால் வீட்டிலும், நாட்டிலும் அமைதி நிலவும் தமிழக அரசு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்


KOVAIKARAN
அக் 18, 2025 10:33

வரதட்சணை, காதல் விவகாரம், பாலியல் தொல்லை, தகாத உறவு, குடும்ப சண்டை, வாய்த் தகராறு, தொழில் போட்டி காரணமாக நடந்த கொலைகள் குறித்தும் காவல் துறை வழக்குகள் பதிவு செய்துள்ளது. இத்தகைய கொலைகளுக்கு முக்கிய காரணம், தொலைகாட்சி தொடரில் ஒளிபரப்பப்படும் கதைகளின் தரம்தான். அவற்றில் தான் அடுத்தவர் கணவனையோ, மனைவியையோ, எப்படிக் கவருவது என்று விபரமாகக் காட்டுகிறார்கள். அடுத்தவர்கள் குடும்பத்தைக் கெடுப்பது, தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஒருதலைக்காதல் உள்ளவன் அந்தப் பெண்ணைக் கொலை செய்வது என்று பல மாதிரியான கேடு கேட்ட காட்சிகள் அநேகமாக எல்லா தொலைக்காட்சிகளிலும் மிகவும் அதிகம். இதற்கு அடுத்தது அரசின் சாராய வியாபாரம். அரசு சாராயத்தைக் குடித்துவிட்டு பாலியல் தொல்லைகளில், ஈடுபடுவதும், அவர்களைக் கொலை செய்வதும் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் தடுக்கவேண்டிய காவல் துறையிலுள்ள கீழ்மட்ட, மற்றும் மேல்மட்ட அதிகாரிகள் ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளின் பின்னாலேயே போவதும், அவர்களைக் காக்கா பிடித்தால் போதும் அவர்களுக்கு அடிமையாக இருந்தால், அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் மற்ற வசதிகளை பெருக்கிக்கொள்ளலாம் என்று எண்ணி செயல்படும் ஏவல்துறையாக மாறிவிட்டதும் ஒரு முக்கிய காரணம்.


V Venkatachalam
அக் 18, 2025 09:18

6862 கொலைகளில் ஆணவக்கொலைகளை பத்தி தகவலே இல்லையே. ஆணவக்கொலைகள் இல்லாத போது எதுக்கு ஆணவக் கொலைகள் பேரில் ஆணையம்? இது காசை கரியா அடிக்குற வேலை தானே. எக்ஸ் நீதிபதி பாஷாவிடம் ஏதாவது கடன் பட்டிருக்கா?


baala
அக் 18, 2025 09:17

தனி மனிதன் ஒழுக்கம் இல்லை என்றால் அரசாலோ அல்லது சட்டதாலோ எதுவுமே செய்ய முடியாது. உலகில் நேர்மையானவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். அப்படியே இருந்தாலும் அவர்கள் ஏமாளி பட்டத்திற்க்கு ஆளாவார்கள். திருடர்கள், நல்லொழுக்கம் இல்லாதவர்கள் இருக்கும் வரை எல்லாமே நடக்கும் தானே. அரசியல்வாதிகளை எத்தனை பேர் கேட்டார்கள் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதை. அப்புறம் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.


Natarajan Ramanathan
அக் 18, 2025 07:30

ரவுடி ராஜ்ஜியம்தான். சராசரியாக ஓர் நாளைக்கு நான்கு கொலைகள் என்பது திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி.


Indian
அக் 18, 2025 07:23

மத்திய அரசின் மோசமான சட்டங்களால் தான் இந்த நிலைமை ....சட்டம் சரியாய் இருந்தால் ஏன் அரிவாள் எடுக்க போகிறான் ??. வளைகுடா நாடுகளில் இப்படி தான் நடக்குதா ???. 6 வயது குழந்தையை கற்பழித்து கொன்னவன் வெளியே இருக்கான் ??. என்ன சட்டம் ??


ஆரூர் ரங்
அக் 18, 2025 08:24

சட்ட ஒழுங்கு மாநில அரசின் பொறுப்பு. காவல்துறை பொறுப்பு வகிக்கும் துருப்பிடித்த கரம். ராஜிவைக் கொன்ற குற்றவாளிக்கு விருந்து கொடுத்து மகிழ்கிறது. கொலையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறது.மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.


vivek
அக் 18, 2025 09:09

உண்மை கைலாசம்...தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றினால் இந்தியாவில் இது போல நடக்காது


Indian
அக் 18, 2025 11:48

சும்மா எதுக்கு எடுத்தாலும் மாநில அரசை குறை சொல்லாதீங்க ?? ./ ஒரு வீட்டில் தகப்பன் சரில்லை என்றால் வீடே சீரழியும் . அதுபோல தான் , நாட்டில் தலைமை சரியில்லை என்றால் ?? ... 9 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவன் , பெற்ற தாயை கொன்றவன் , விடுவிக்க பட்டு தெருவில் சுற்றுகிறான் . வளைகுடா நாடா இருந்தால் , இந்நேரம் அவன் மண்ணோடு மக்கி போயிருப்பான்


Indian
அக் 18, 2025 11:51

தமிழ் நாட்டில் அல்ல , இந்தியாவில் ஆட்சி மாறினால் சரியாகும் .


முக்கிய வீடியோ