உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9 நாளாக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு டாக்டர்கள் 7 பேர் கைது

9 நாளாக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு டாக்டர்கள் 7 பேர் கைது

சென்னை : காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரி பாதயாத்திரையில் ஈடுபட்ட ஏழு அரசு டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் கொரோனாவில் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாக்டர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு அரசு டாக்டர்களின் சட்ட போராட்டக் குழுவினர், சேலம் மேட்டூரில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை, 11ம் தேதி பாதயாத்திரையை துவங்கினர். இதில், ஏழு டாக்டர்கள் பங்கேற்றனர். ஒன்பதாவது நாளான நேற்று, சென்னை வந்த டாக்டர்கள் குழுவினர், தேனாம்பேட்டையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.'இதற்கு மேல் பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கப்படாது' எனக்கூறி, அவர்களை கைது செய்து, சமூகநலக் கூடத்தில் அடைத்தனர்.இதுகுறித்து, அரசு டாக்டர்களின் சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354ஐ அமல்படுத்தக் கோரி, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து போராடி வருகிறோம். அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்' என்றார்.ஆனால், நான்காண்டுகள் ஆகியும் நிறைவேற்றவில்லை. கொரோனா போன்ற பேரிடர் சூழல் உட்பட பல நெருக்கடி நேரங்களில் பணியாற்றி, பல உயிர்களை காத்துள்ளோம். எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 07:07

பொதுமக்களுக்கு இடையூறாக 7 பேர்கொண்ட மாபெரும் கூட்டமாக திரண்டுவந்த அரசு டாக்டர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்.. ஏன்? இந்த ஏழு பேர் ரோட்டில் நடந்ததால் பொதுமக்கள் சொல்லவொண்ணா துயரங்களை அடைந்தார்கள்... நாடே ஸ்தம்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.. நடந்த போராட்டம் நடத்தும் 7 பேர்கொண்ட வன்முறை கூட்டங்களை தமிழக முதல்வர் இரும்பு கரம்கொண்டு அடக்கினார். தமிழக முதல்வர் கலைஞரின் மகன் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இருக்க மாட்டார். இப்பொழுது அவரது இரும்புக்கரம் ...கொல்லன் பட்டறையில் ரிப்பேர் .செய்யப்பட்டு .பளபள வென்று ..கூறிய நகங்களுடன் ..இருக்கிறது ..நடந்து வந்து உலக நாடுகளுக்கு இடையூறு செய்து தமிழக அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தலாம் என்ற 7 அரசு டாக்டர்களின் கொட்டத்தை அடக்கிவிட்டார்


Gajageswari
ஜூன் 20, 2025 06:25

திராவிட அரசுகள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 20, 2025 06:15

2041 ல் இன்பா தலைமையில் அண்ணன் துரைமுருகன் அமைச்சராக இருக்கும்போது உங்களது கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றிவைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது


புதிய வீடியோ