வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த டிரான்ஸ்ஃபர் ஆல் பொது மக்களுக்கு நன்மை உண்டா என்பது யாருக்கும் தெரியாது. காமராஜர் காலத்துக்கு பின் கலக்டர்களின் மரியாதையே போயே போச்சு.
சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு சிறப்பு செயலாளர் சஜ்ஜன் சிங் சவான், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அரசு கூடுதல் செயலாளர் வெங்கட பிரியா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.சமூக நலத்துறை இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக சரண்யா அரி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன செயல் அலுவலராக ஸ்வேதா சுமன், துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக பிரியங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக இருந்த பானோத் ம்ருகேந்தர் லால், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டிரான்ஸ்ஃபர் ஆல் பொது மக்களுக்கு நன்மை உண்டா என்பது யாருக்கும் தெரியாது. காமராஜர் காலத்துக்கு பின் கலக்டர்களின் மரியாதையே போயே போச்சு.