உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 ரயில்கள் இன்று ரத்து

7 ரயில்கள் இன்று ரத்து

கன மழையால், சென்னை சென்ட்ரல் - போடி நாயக்கனுார் உட்பட, ஏழு விரைவு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.சென்ட்ரல் - போடிநாயக்கனுார், சென்ட்ரல் - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - சென்ட்ரல், திருப்பதி - சென்ட்ரல், சென்ட்ரல் - திருப்பதி, ஈரோடு - சென்ட்ரல், திருப்பதி - சென்ட்ரல் சப்தகிரி ஆகிய ரயில்களின் இன்றைய சேவை ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டுக்கு விடுமுறை

கன மழை காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை