உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டி

வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டி

சென்னை: பொது வருங்கால வைப்பு நிதிக்கு, 7.1 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொது வருங்கால வைப்பு நிதியாக, சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் முதல், 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, மத்திய அரசின் தீர்மானத்தின்படி, அக்., 1 முதல் டிச., 31 வரை, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அதேபோன்ற பிற வைப்பு நிதிகளில், சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு, 7.1 சதவீதம் வட்டி கணக்கிடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ