உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.28 லட்சம் பேர் மனு; தேர்தல் கமிஷன் தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.28 லட்சம் பேர் மனு; தேர்தல் கமிஷன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி 7 லட்சத்து 28 ஆயிரத்து 432 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர் என தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் வழங்கலாம் எனவும் தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இதுவரை 6 மற்றும 6 ஏ படிவங்களை நிரப்பி 7 லட்சத்து 28 ஆயிரத்து 432 பேர் மனு கொடுத்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.அதேபோல், 'பெயரை நீக்கக் கோரி 9,410 பேர் மனு கொடுத்துள்ளனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பெயரை சேர்க்க கோரி விண்ணப்பம் கொடுத்தவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்', என தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Keshavan.J
டிச 29, 2025 21:20

ஜனவரி 18 குள் 97 லட்சம் பேர் குடுப்பானுங்க. தி மூ க வா கொக்கா , திருட்டு பயலுங்க எப்படியாவது கள்ள வோட்டு ஏத்திடுவானுங்க .


தங்கபாண்டி
டிச 29, 2025 18:56

வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை.. இரண்டாவது விண்ணப்பித்தும் எனக்கு வரமடுக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை