உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 மாதங்களில் டெங்குவால் 7,500 பேர் பாதிப்பு

5 மாதங்களில் டெங்குவால் 7,500 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில், 7,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர்; நான்கு பேர் உயிரிழந்து உள்ளனர்.தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் டெங்கு, இன்ப்ளூயன்ஸா, கொரோனா பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இவற்றால், தினமும் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில், 'ஏடிஸ் - ஏஜிப்டி' வகை கொசுக்களால் பரவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் மட்டும், தினமும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதில், நோய் பாதிப்பு குறித்து அறியாமல், தீவிர நிலையில் மருத்துவமனைக்கு வந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 'ஒசல்டாமிவிர்' தடுப்பு மருந்து போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதால், காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஓரிரு நாட்களுக்கு பின் இருந்தால், தாமதிக்காமல் டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.மேலும், வீடுகள், சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தியாகத படி துாய்மை பணியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே பாதிப்பை ஓரளவுக்கு தடுக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அனுப்
ஜூன் 03, 2025 20:33

டெங்கு, கொரோனா போட்டுத் தாக்கு. போட்டுத்தாக்கு.


Kasimani Baskaran
ஜூன் 03, 2025 03:50

கொசு வளரும் அளவில் இருக்கும் சாக்கடைகளை நீக்கவில்லை என்றால் வாழ்க்கையே நீக்கிவிடும் வல்லமை படைத்தவை டெங்கி வைரஸ் பரப்பும் கொசுக்கள்.


முக்கிய வீடியோ