உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.பி.ஜி., குழும தலைவர் வீட்டில் ரூ.8.38 கோடி பறிமுதல்

ஓ.பி.ஜி., குழும தலைவர் வீட்டில் ரூ.8.38 கோடி பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு, 1,148 கோடி ரூபாயை, போலி நிறுவனங்கள் பெயரில், பங்கு சந்தையில் முதலீடு செய்த, ஓ.பி.ஜி., குழுமத்தின் நிறுவனம் மற்றும் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, 8.38 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.சென்னையில், நிலக்கரி மற்றும் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யும், ஓ.பி.ஜி., குழுமத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓ.பி.ஜி., குழுமத்தின் தலைவராக அரவிந்த் குப்தா உள்ளார்.அவர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இரண்டு நாட்களாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள, ஓ.பி.ஜி., குழுமத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், சோதனை நடத்தினர். சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். சென்னையில் உள்ள அரவிந்த் குப்தா வீட்டில் இருந்த, 8.38 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அரவிந்த் குப்தா மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், ஆப்பிரிக்காவில் உள்ள தீவு ஒன்றில், போலி பெயரில் நிறுவனம் துவங்கி, அதில் இருந்து, ஓ.பி.ஜி., குழுமத்திற்கு, 1,148 கோடி ரூபாய் முதலீடு வந்து இருப்பதாக, கணக்கு காட்டயதும், அந்த தொகையை, ரியல் எஸ்டேட், பங்கு சந்தையிலும் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்தது. மேலும், சட்ட விரோதமாக, சிங்கப்பூர், துபாய், ஹாங்காங் நாடுகளில் உள்ள, தங்களின் நிறுவனங்களுக்கும் அனுப்பியது தெரிய வந்துள்ளது. போலி நிறுவனங்கள் துவங்கியது மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raghavan
நவ 14, 2024 09:23

இவைகள் எல்லாம் வெறும் செய்திகளோடு சென்றுவிடும். வழக்கு பதிவுபண்ணி அது ஒரு 20 வருடம் நடக்கும் இவர்களுக்கு வாதாடுவதற்காகவே பெரிய பெரிய வக்கீல்கள் டெல்லியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எப்படி யாரை எங்கே கணக்குப் பண்ணவேண்டும் என்று. கடைசியில் அரசாங்க தரப்பில் போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்பார்கள். இதுதான் நடைபெறுகிறது. மல்லையா, நிரவ் மோடி வழக்கே எடுத்துக்காட்டு. வெறும் கண்துடைப்பு.


N.Purushothaman
நவ 14, 2024 08:20

சிவகங்கை சீமானின் தொப்புள் கொடி உறவுகள் அணைத்து இடத்திலும் உள்ளன ...


raja
நவ 14, 2024 07:51

நல்லா விசாரிங்க ஆபீசர்ஸ்.... அந்த பனங்கள் எல்லாம் நம்ப சின்னவன் கொள்ளை அடித்த 30000 கோடியில் ஒரு பகுதியாக இருக்க போகுது... ஏற்கனவே மாலத்தீவில் வழியாகத்தான் 2 ஜி யில் கொள்ளை அடித்த பணமும் மும்பை பல வியாபாரி வழியாக தமிழகத்தில் கட்டுமர டீவியில் முதலீடு செய்ய பட்டது...


T Jayakumar
நவ 14, 2024 06:53

தமிழக அரசியல்வாதிகளின் பணமாக இருக்குமோ.


அப்பாவி
நவ 14, 2024 06:36

ஆப்பிரிக்கா பக்கத்துல தீவுன்னா மொரிஷியஸ் தான். அதுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு ரொம்ப வருஷமா இருக்கு.


Kasimani Baskaran
நவ 14, 2024 05:00

வணிகர் காட்டிய வழியில் பலர் பயணித்து சிக்கியிருக்கிறார்கள். அமீரகத்தில் இருந்து வந்த முதலீடுகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி