உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்றாண்டுகளில் 8,682 புதிய பஸ்கள் : தமிழக அரசு தகவல்

மூன்றாண்டுகளில் 8,682 புதிய பஸ்கள் : தமிழக அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசு பஸ்களில், பெண்கள் இலவச பயண திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 8,682 புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2021ல் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், பல்வேறு திட்டங்களை துவக்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அதில், மகளிர் விடியல் பயண திட்டம், பெண்களின் வாழ்வில் விளக்கேற்றும் திட்டமாக பாராட்டப்படுகிறது. மாநில திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வில், ஒவ்வொரு பெண் பயணியும், மாதாந்திர செலவில், 888 ரூபாய் சேமிப்பது தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தில், கடந்த அக்., 31ம் தேதி வரை, 570.86 கோடி பயண நடைகள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 399 புதிய வழித்தடங்களில், 725 பஸ்கள் இதற்காக இயக்கப்படுகின்றன.

அரசாணை

கடந்த, 2021க்கு பின், 8,682 புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அரசு பஸ்களில் கண்காணிப்புக் கேமரா, விரைவு பஸ்களில் பெண்களுக்கு தனியாக நான்கு இருக்கைகள், டிக்கெட் முன்பதிவுக்கு புது செயலி. 'ஆன்லைன்' முன்பதிவை ஊக்குவிக்க பரிசு திட்டம், மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ்., வசதி, கட்டண சலுகை டிக்கெட்டுகளை இ - சேவை மையத்தில் பெறும் வசதி, நவக்கிரக கோவில்களுக்கு சிறப்பு பஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அரசு போக்குவரத்து கழகங்களில் இதுவரை, 3,959 'ஓட்டுனருடன் நடத்துனர்' பணியிடங்கள் நியமிக்கவும், 537 தொழில்நுட்ப பணியாளர்களை நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டு, அதில், ஒருவரே இரு பணிகளையும் செய்யும் திறனுள்ள, 684 ஓட்டுனருடன் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.சென்னை பஸ் செயலிக்காக, மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, 'மத்திய அரசின் சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு உடைய நகரம்' என்ற விருது வழங்கப்பட்டது. வாட்ஸாப், இணையதளம் வாயிலாக குறைகளை தீர்க்கும் செயல் திட்டத்துக்காக, விரைவு போக்குவரத்து கழகத்துக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் அரசு போக்குவரத்து கழகங்களில், விபத்தில்லாமல் பணிபுரிந்த, 42 ஓட்டுனர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியதில், தமிழக ஓட்டுனர்கள், 14 பேருக்கு விருது கிடைத்துள்ளது.

சிறந்த போக்குவரத்து

பொது பஸ் போக்குவரத்து செயல் திறன்களுக்காக, இந்திய சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு, 17 விருதுகளை வழங்கியுள்ளது. இதில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், 16 விருதுகளை வென்று உள்ளன. தமிழக போக்குவரத்து கழகங்கள், இந்திய அளவில் சிறந்த போக்குவரத்து நிறுவனமாக பாராட்டப்படுவதற்கு, தேசிய அளவில், 25 சதவீத விருதுகளை, தமிழகம் பெற்றுள்ளதே சான்றாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ram pollachi
நவ 24, 2024 19:29

வண்டியின் பின்பகுதியில் இஞ்சின் உள்ளது அதனால் உயரம் அதிகம் இருக்கையை விட்டு எழுந்தால் ஆண் பயணிகளின் தலை தட்டும், நீளம் அதிகம், தானியங்கி கியர் ஆக இதை ஓட்ட பொள்ளாச்சியில் சிறப்பு பயிற்சி தரப்பட்டு ஒவ்வொன்றாக நகரத்தை வந்தடைந்தது.... வாழ்வு சாவு எல்லாம் சாலையில் நடப்பதால் எங்கும் எளிதாக பயணிக்க முடியாது பொறுமையும் சகிப்புத்தன்மையும் உள்ளவர்கள் மட்டுமே இதை இயக்க முடியும்.


Anantharaman Srinivasan
நவ 24, 2024 14:45

சென்னையில் ஒடும் புதிய தாழ்தள பஸ்களில் சீட் Arrangement பின் இருக்கைககளுக்கு படியேறி செல்ல வேண்டியுள்ளது. தாழ்தள பஸ் என்று சொல்லிவிட்டு உள்ளே படி ஏறி செல்ல வேண்டியுள்ளது. முன்பக்கத்திலும் பஸ்சின் இருபுறமும் பெரிய பெட்டிகள் வைக்கப்பட்டு சீட் எண்ணிக்கை குறைவாகயுள்ளது. Bus decision சரியில்லை.


தமிழ்வேள்
நவ 24, 2024 19:06

நீங்கள் குறிப்பிடும் பெட்டி முன்சக்கரத்தின் மட்கார்டு. தாழ்தள பேருந்துகள் அனைத்திலும் மிக பெரியதாக இடம்அடைக்கும் வகையில் தான் இருக்கும்..இதை என்ன டிசைன் என்று பயன்படுத்துகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது...வெறும் 30 சீட்டுகள் மட்டுமே உள்ளன. சாதாரண வகை பேருந்துகள் எவ்வளவோ பரவாயில்லை...


Karthik
நவ 24, 2024 14:12

புதுசு புதுசு புதுசு.... புதுசா வாங்கினா மட்டும் பத்தாது, பராமரிப்பும் ஒழுங்கா செய்யுங்க..


N Srinivasan
நவ 24, 2024 14:11

Procurement order has been given for 8682 buses. Of this 2578 buses are procured and operational across the state. I was breaking my mind on the count and the reality. Only after reading a English news paper I got correct information


Nandakumar Naidu.
நவ 24, 2024 12:07

எல்லாம்.சரி, தனியார் பஸ்கள் மட்டும் ஏன் நல்ல பராமரிப்புடன் பல வருடங்கள் பயன்பாட்டில் உள்ளன? அரசு பஸ்கள் மட்டும் ஏன் ஒரு சில வருடகளிலேயே சீர் குலைந்து விடுகிறது? சரியான பராமரிப்பு இல்லாமல் உழல் நடக்கிறது என்று நினைக்கிறேன். அரசு போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கிவிட்டால் சிறப்பாக செயல்படும்.


duruvasar
நவ 24, 2024 11:07

ஏதோ கின்னஸ் ரெகார்ட் சாதனை போல் இவ்வளவு பில்டப். கண்டக்டர் இருக்கையோடு ரோட்டில் விழுந்தெல்லாம் இந்த மார்தட்டில் அடங்குமா ?


veeramani
நவ 24, 2024 10:05

தமிழக ஆ ரசிற்கு ஒரு விஞ்ஞானியின் வேண்டுகோள் காற்று மாசுபடுதல், மற்றும் அதீத தட்பவெப்பநிலை மாற்றம் ....இதில் உலக நாடுகள் மண்டையை பிய்த்துகொண்டுஉள்ளன . டீசல் பேருந்து வாங்கிக்குவிக்கிறீர்கள் டீசலினால் காற்று மாசு என்பது அதிகம் . சென்னையிலும் காற்று மாசு பெங்களூரைவிட அதிகம். விரைவில் டில்லியை தொட்டுவிடலாம் .அனைத்து பபேர்களிலும் டில்லி மாசு பற்றி படிக்கிறீர்கள். எனது வேண்டுகோள் சென்னை மாநகரம், செங்கை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் சி என் ஜி பஸ்கள் கொண்டுவரலாம் அல்லது பாட்டரி பஸ் ஊட்டலாம். இதனால் காற்று காசு மிக குறைந்த அளவில் இருக்கும் முதலில் மழையினால் வெல்ல அபாயம் சிறுது குறையும்.


Kasimani Baskaran
நவ 24, 2024 07:58

உலகில் இது போல அழகான பேருந்துகள் நான் சென்ற எந்த நாட்டிலும் இல்லை - பாமரர்


Mani . V
நவ 24, 2024 07:37

பழைய பேருந்துகளுக்கு வர்ணம் பூசி இப்படி ஏமாற்றலாமா?


vadivelu
நவ 24, 2024 07:21

போக்குவரத்து கழகங்கள் உருவானதால் இருந்து இதுவரை பல லட்சம் பஸ்கள் வாங்கப்பட்டு இருக்கும். இந்த மாநிலங்களை நம்பிதான் டாடா, அசோகமலேலாண்ட் கம்பனிகள் நடக்கின்றன.


சமீபத்திய செய்தி