பொள்ளாச்சி: தமிழகத்தில், மார்ச் முதல் ஆக., மாதம் வரை, 88,300 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 26 மாநிலங்களில் உள்ள, 75 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல் நடக்கிறது.அவ்வகையில், தற்போது, மார்ச் முதல் ஆக., மாதம் வரை, 88,300 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கொப்பரை கிலோ, 111.60 ரூபாய்க்கும், பந்து கொப்பரை கிலோ, 120 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் தொகை உடனடியாக வரவு வைக்கப்படும்.அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 31,500 மெட்ரிக் டன்; திருப்பூர் மாவட்டத்தில், 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 22,950 மெட்ரிக் டன்;ஈரோடு மாவட்டத்தில், 12 கூடங்களில், 9,900 மெட்ரிக் டன்; தஞ்சாவூர் மாவட்டத்தில், 4 கூடங்களில், 9,700 மெட்ரிக் டன்; திண்டுக்கல் மாவட்டத்தில், 3 கூடங்களில், 2,350 மெட்ரிக் டன்; கன்னியாகுமரி மாவட்டத்தில், 2 கூடங்களில், 125 மெட்ரிக் டன்;வேலுார் மாவட்டத்தில், 2 கூடங்களில், 250 மெட்ரிக் டன்; திருப்பத்துார் மாவட்டத்தில், 2 கூடங்களில், 225 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேபோல, சேலம் மாவட்டத்தில், 3 கூடங்களில், 925 மெட்ரிக் டன்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 கூடங்களில், 300 மெட்ரிக் டன், புதுக்கோட்டை மாவட்டத்தில், 2 கூடங்களில், 1,800 மெட்ரிக் டன்;மதுரை மாவட்டத்தில், 2 கூடங்களில் 175 மெட்ரிக் டன், தேனி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களில் தலா, ஒரு கூடத்தில் முறையே, 175, 400, 350 மெட்ரிக் டன், திருநெல்வேலி மாவட்டத்தில், 4 கூடங்களில் 600 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தவிர, தென்காசி, திருச்சி, கரூர், தர்மபுரி, நாகபட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கூடத்தில், முறையே, 350, 150, 150, 160, 200, 765 மெட்ரிக் டன்; நாமக்கல் மாவட்டத்தில், 3 கூடங்களில், 2,250 மெட்ரிக் டன், திருவாரூர் மாவட்டத்தில், 3 கூடங்களில் 900 மெட்ரிக் டன்,மயிலாடுதுறை மாவட்டத்தில், 2 கூடங்களில், 550 மெட்ரிக் டன், சிவகங்கை மாவட்டத்தில், 3 கூடங்களில், 1,100 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.