உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எண்ணூர் அனல்மின் நிலையத்தில் சாரம் சரிந்து 9 பேர் பலி

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் சாரம் சரிந்து 9 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் விரிவாக்கப் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வாயலுாரில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையத்தை மின் வாரியம் அமைத்து வருகிறது. இதன் கட்டுமான பணிகளை, மத்திய அரசின் பி.எச்.இ.எல்., எனப்படும், 'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n7srh9so&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்டுமான பணிகளில் 30க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.2 லட்சம்

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: சென்னையில் சாரம் சரிந்து உயிரிழந்த சம்பவம் அறிந்து வருத்தம் அடைந்தேன். துயரமான இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு நினைவாக எனது எண்ணம் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். https://x.com/PMOIndia/status/1973057760666464428

ரூ.10 லட்சம்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.https://x.com/mkstalin/status/1973057640193519914மின்துறை அமைச்சர் சிவசங்கர், டான்ஜெட்கோ தலைவர் ராதாகிருஷ்ணனையும் உடனே நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

rama adhavan
செப் 30, 2025 22:44

கூட்டத்துக்கு போக மட்டும் நம் ஆட்கள். வேலை செய்ய வட நாட்டார் போலும். எங்கே சீமான் போன்ற நபர்கள்.


Gokul Krishnan
செப் 30, 2025 22:28

மிகுந்த மன வேதனை அளிக்கிறது இந்த இழப்புகள்


R. SUKUMAR CHEZHIAN
செப் 30, 2025 22:10

இந்த செய்தி மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது அரசு இவர்கள் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். ஓம் சாந்தி


Venugopal S
செப் 30, 2025 21:47

மத்திய பாஜக அரசு பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக வெள்ள நிவாரண நிதி வழங்காமல் பாரபட்சமாக நடந்து கொள்வது போல் தான் இதுவும்!


rama adhavan
செப் 30, 2025 20:57

Next big tragedy in TN after Karur within a week. TANGEDCO seems to be owner. Now will officials will have to come again with all sorts of materials exonerating the state agency for the tragedy. Let us wait and see. However our deed regrets and respect for the lost lives. Please give at least Rs.25 lakhs to each of the families of the moribund.


Ravi Kumar
செப் 30, 2025 20:55

HSE HEALTH, SAFETY,AND ENVIRONMENT VERY POOR STATUS IN TAMILNADU, ANNA UNIVERSITY ALSO VERY CARELESS ABOUT THE SYLABUS, ENGINEERING CONTRACTORS, NOT FOLLOWS THE SAFETY NORMS DUE TO COST CUTTING TECHNIQUES, WORLD WIDE VERY SHAME TO US.


ஆரூர் ரங்
செப் 30, 2025 20:42

கள்ளக்குறிச்சி கரூர் மாதிரி பத்து லட்சமெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. இவர்கள் வாக்கு வங்கியேயில்லாத அப்பாவிகள்.


MARUTHU PANDIAR
செப் 30, 2025 22:02

200% உண்மை.


உண்மை கசக்கும்
செப் 30, 2025 20:41

இந்த விபத்திற்கு யார் காரணம்? ஏன் மீடியா கூட்டம் அங்கு செல்லவில்லை? ஏன் 20 ஆம்புலன்ஸ் செல்லவில்லை? ஏன் அரசு செயலாளர் பேட்டி கொடுக்கவில்லை. ஓ. புரிந்து விட்டது. இறந்தவர்கள் வடக்கன்கள்.


v srinivasan
செப் 30, 2025 20:15

மனித தவறுகளால் கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது. மனிதன் மட்டும் தான் ஆறறிவு பெற்ற புத்திசாலி என்று கூறி கொண்டு தனது அறியாமையால் வாழ்க்கையை இழக்கிறான். இனி என்ன? மந்திரிகள்,முதல்வர் வருகை, விசாரணை கமிஷன். அட போங்கப்பா


Balaa
செப் 30, 2025 20:08

,10 லட்சம். துரதிர்ஷ்டம். வருமுன் காப்போம் என்ற எண்ணமே கிடையாது. பணத்தால் எல்லோரையும் அடித்து விடலாம் என்ற மமதை இறுக்கிற வரை இது தொடரும்.


முக்கிய வீடியோ