உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்

கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்த விவகாரத்தில் அரசு டாக்டர், நர்ஸ்கள் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சேலம் வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் சென்டரில், கருவின் பாலினத்தை விதி மீறி கண்டறிந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வில் அம்பலமானது. குழந்தை பாலினம் தெரிவிக்க தலா ரூ.15 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. புகாரின்பேரில் ஸ்கேன் சென்டரில் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் அரசு டாக்டர் முத்தமிழ், நர்ஸ்கள் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த அதிகாரிகள், இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

lana
பிப் 28, 2025 13:54

இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி. பிச்சை போடும் group ஆக மாறி விடுவது. உடனடியாக தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் மாமூல் அதிகம்


R S BALA
பிப் 28, 2025 11:17

பெண்குழந்தை வேணாங்கற ஒரு குரூப் அத சோதிச்சு சொல்ற இன்னொரு குரூப் இவிங்கல்லாம் இன்னுமா இந்த உலகத்துல இருக்காய்ங்க..


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 11:05

தனியார் மருத்துவமனை டாக்டர், நர்ஸுங்க ன்னா மிரட்டி அள்ளியிருப்போம் .... இது சஸ்பெண்டோட போச்சே ..... வட போச்சே ....


Shekar
பிப் 28, 2025 10:54

ஒருத்தன் துபாய்ல போய் பார்த்து அறிவிச்சானே, தொப்புள் கோடி அறுத்தானே அவனுக்கு மட்டும் சட்டம் தன கடமையை செய்யாதா யுவர் ஆனர்?


Keshavan.J
பிப் 28, 2025 10:42

டாக்டர்கள் ஸ்கேன் செய்து சொல்லாவிட்டாலும் செக் அப்புக்கு போகும்போது தவறுதலாக குழந்தையின் பாலினத்தை கூறிவிடுகிறார்கள். எப்படி என்றால் குழந்தை என்பதற்கு பதிலாக அவள் அவன் என்கிற வார்த்தைகள் வாய் தவறாக உபயோகிக்கிறார்கள். இதுவும் தவறுதானே


ஆரூர் ரங்
பிப் 28, 2025 10:30

திருமணத்துக்கு பெண் கிடைக்காதது எல்லா சமுதாயங்களிலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெண்களே வீடு, கார், லட்சக்கணக்கில் சம்பளம் என்று எதிர்பார்க்கின்றனர். அடுத்து ஆண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுக்கும் அவல நிலை வராமலிருக்க வேண்டும்.


baala
பிப் 28, 2025 10:14

பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டியது.


தமிழன்
பிப் 28, 2025 10:01

என்னய்யா இது சும்மா சஸ்பெண்ட்?? இதெல்லாம் சும்மா கொசுறு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்


S SRINIVASAN
பிப் 28, 2025 09:59

very good


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை