உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களத்தில் 950 வேட்பாளர்கள்; 68,321 ஓட்டுச்சாவடிகள் தயார்!: சத்யபிரதா சாஹூ

களத்தில் 950 வேட்பாளர்கள்; 68,321 ஓட்டுச்சாவடிகள் தயார்!: சத்யபிரதா சாஹூ

சென்னை: நாளை (ஏப்.,19) தமிழகத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், இதற்காக 68,321 ஓட்டுச்சாவடிகள் தயாராக இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை (ஏப்.,19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தமிழகம் முழுவதும் 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 44,801 ஓட்டுப்பதிவு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 6 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு வந்து வரிசையில் இருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

950 வேட்பாளர்கள்

6.23 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதிப்பெற்றுள்ளனர். 39 இடங்களில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

புகார்கள்

சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ.173.85 கோடி பணம், ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Yaro Oruvan
ஏப் 18, 2024 13:56

அதிமுக விசுவாசிகளுக்கு: இந்த முறை நீங்கள் இரட்டை இலைக்கு போட்டால் நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் திமுகவிற்கு சாதகமாக போகும் திமுகவை ஒழிக்க நினைத்த புரட்சித்தலைவர் மற்றும் அம்மா அவர்களின் எண்ணம் ஈடேற தீய சக்தி திமுக வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய விஷ செடி சிந்தித்து செயல்படுங்கள் திமுக ஒழிய வேண்டும் என்ற எண்ணம் உண்மையாக இருந்தால் இம்முறை பாஜகவிற்கு வாக்களியுங்கள்இது நாடாளுமன்ற தேர்தல் நமக்கு தேவை நாட்டை உயர்த்தும் நமக்கு உதவும் MP ஜைஹிந்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை