உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை

உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாரமங்கலம்: சேலம், சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்த கார்த்திக், 26. இவரது மனைவி ஈஸ்வரி, 26. இவர் குழந்தைப்பேறுக்கு, தாரமங்கலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்து, ஆதிரை என பெயர் சூட்டினர்.குழந்தைக்கு, மூன்று மாதம் முடிந்ததும் பல்வேறு நாடுகளின் தேசியக்கொடிகளை காட்டி, ஈஸ்வரி பயிற்சி அளித்து வந்தார். தொடர் பயிற்சியால் நான்காவது மாதத்தில், 32 நாடுகளின் கொடியை, ஆதிரை சரியாக தொட்டு காட்டினார்.இந்நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த ஈஸ்வரி, கடந்த அக்., 7ல், 'நோபல்' உலக சாதனை புத்தகத்துக்கு அனுப்பினார். இதை ஆராய்ந்து, 22ல் நோபல் உலக சாதனை புத்தகத்தில், ஆதிரையின் பதிவு இடம்பிடித்தது.மேலும் ஆதிரைக்கு நோபல் உலக சாதனை சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன. அதை, ஈஸ்வரி, அவரது குடும்பத்தினருடன் சென்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரிடம் காட்டி மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kathiravan Pillai
நவ 05, 2024 23:26

Very good if give traing any thinks


gowri gowri p
நவ 05, 2024 01:42

வெரி குட் chellakkutty


என்றும் இந்தியன்
நவ 04, 2024 17:29

இதோ இன்னும் சில 12 Oct, 2023 மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நந்தன் - பிரியங்கா தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்ததுசரண்யா. அதற்கு குழந்தை சரண்யா பெயரில் 31 வகையான சான்றிதழ்கள் பெறப்பட்டிருப்பதால் உலக சாதனைக்காக அவர்கள் தகவல்களையும், ஆவணங்களையும் அனுப்பினர். இதையடுத்து குழந்தை சரண்யாவின் பெயர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 20 Feb 2024 இதற்கு முன்பு 120 வகையான பொருட்களை அடையாளம் காட்டி ஆந்திராவை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாத குழந்தை சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இவான்வி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 14 May 2024பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதியின் மகள் 4 மாதமே ஆன இவான்வி. இந்த குழந்தை பிறந்து 2 மாதம் ஆனபோது தாய் சினேகா விளையாட்டாக 2 படக்காட்சி அட்டை பிளாஷ் கார்டு காட்டியுள்ளார். குழந்தை சரியான அடையாளத்தை காட்டியுள்ளது. இவ்வாறு குழந்தை இவான்வி தனது நினைவாற்றல் மூலம் வீட்டு பிராணிகள், பழங்கள், பூக்கள், காய்கறிகள், பறவைகள், வாகனங்கள், பல்வேறு நாடுகளில் 10 கொடிகள் என 125-க்கும் மேற்பட்டவற்றை படக்காட்சி மூலம் அடையாளம் காட்டுவதில் படுசுட்டியாக உள்ளது. வீடியோவாக பதிவு செய்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை அங்கீகரித்து உலக சாதனை புத்தகத்தில் இவான்வி பெயரை சேர்த்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தேர்வுத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் 4 மாதமே ஆன குழந்தை இவான்வி உலக சாதனை படைத்து பெற்றோருக்கும், பெங்களூருவுக்கும் பெருமை சேர்த்துள்ளது.


Gopalakrishnan Manikandan
நவ 04, 2024 13:44

சாதனைகளுக்கு லிம்கா புக் ஆஃப் வேர்ல்டு ரெகார்ட், மற்றும் கின்னஸ் சாதனை புத்தகம் உள்ளன. நோபல் எப்போது முதல் இந்தமாதிரி சாதனைகளுக்கு வழங்கப்படுகிறது? ஒருவேளை ஸ்பெஷல் ஆ இருக்குமோ?


AJITH KUMAR
நவ 04, 2024 09:51

Fake news. How its possible? 4 month baby couldnt identify even our parents properly?


Sathish
நவ 03, 2024 18:28

Infusing stress from birth


Shobhana S
நவ 03, 2024 14:59

இந்த ௪ெய்தி ௨ண்மையா? விள௧்௧வும்


Ramesh Sargam
நவ 03, 2024 12:22

சாதனை செய்கிறேன் என்று கூறி ஏதாவது தப்புத்தண்டா செய்து இந்தியாவின் பெயரை கெடுக்காதீர்கள்.


Anantharaman Srinivasan
நவ 03, 2024 11:20

பிஞ்சு குழந்தை 32 நாடுகளின் கொடியை தெரிந்துகொண்டு வாழ்க்கையில் என்ன சாதிக்க போகிறது. Waste of time for both.


Sivaswamy Somasundaram
நவ 03, 2024 08:49

சித்திரவதை. இவர்கள் விளம்பரத்திற்கு பிஞ்சு பலிகடா.


புதிய வீடியோ