உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடவுள் மறுப்பாளர்களை விரட்டி அடிக்கும் மாநாடு

கடவுள் மறுப்பாளர்களை விரட்டி அடிக்கும் மாநாடு

மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்துக்களின் எழுச்சியை காட்டுகிறது. முஸ்லிம்களை அச்சுறுத்தவே மாநாடு நடத்தப்படுவதாக தி.மு.க, திட்டமிட்டு அவதுாறு பிரசாரம் செய்தது. இயக்குநர் அமீர், வி.சி., தலைவர் திருமாவளவன் போன்ற ஹிந்துக்களுக்கு எதிரான தீய சக்திகளை ஒன்றிணைத்து, போலி வேஷத்துடன் தி.மு.க., ஆட்சி நடத்துகிறது.முருக பக்தர்கள் மாநாட்டில் கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் மத வழிபாட்டு முறையில் வேறாக இருந்தாலும், எங்கள் முப்பாட்டன் முருகனைத்தான் வணங்கி வருகிறோம். நாங்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள். முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியலில், மைல் கல்லாக இருக்கும்; கடவுள் மறுப்பாளர்களை தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கும். - வேலுார் இப்ராஹிம்தேசிய செயலர், பா.ஜ., சிறுபான்மை பிரிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

போராளி
ஜூன் 24, 2025 18:10

உருட்டு ராஜா உருட்டு


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2025 07:04

தனிமனித உரிமையை பறிக்கும் அடக்கு முறையாளர்களை விரட்டி அடித்த மாநாடு என்றும் எழுதலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை