உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு பிச்சை தான் எடுக்கும்: இப்ராஹிம்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு பிச்சை தான் எடுக்கும்: இப்ராஹிம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்: ''பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும், சோற்றுக்கு பிச்சை எடுக்கும் என்பதற்கு, பாகிஸ்தான் மிகப்பெரிய உதாரணம்,'' என, மதுரையில் பா.ஜ., சிறுபான்மைப்பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றத்தில் நடக்கும் ஆப்பரேஷன் சிந்துார் பேரணி, மொழி, இனம், மதம் கடந்து, பாகிஸ்தான், சீனா மட்டுமின்றி, நம் தேசத்திற்குள் இருக்கும் பயங்கரவாத சக்திகளையும் துணிவோடு எதிர்ப்போம் என்பதை காட்டுவதாக உள்ளது. சிந்து நதி நீரை திறக்கும்படி, இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்டியிடுகிறது.பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த ஒரு நாடும், சோற்றுக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்துவிடும் என்பதற்கு அந்நாடே உதாரணம்.தி.மு.க., - எம்.பி., கனிமொழியை உலக நாடுகளுக்கு அனுப்பி, தேசப் பெருமையை பேச வைத்துள்ளார் மோடி. ஆனால், சிந்துார் பேரணியில் நான் பங்கேற்கக் கூடாது என, போலீசார் நெருக்கடி கொடுக்கின்றனர்.வெளிநாடுகளில் ஒரு வேடம், தமிழகத்தில் ஒரு வேடம் என செயல்படும் தி.மு.க.,வை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., முற்றிலும் துடைத்து எறியப்படும்.எல்லா விஷயங்களிலும் பா.ஜ., நேர்மையாக செயல்படுகிறது. அதே நேரம், தி.மு.க., எல்லா விஷயங்களிலும் இரட்டை வேடம் போடுகிறது.தமிழக நலனுக்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு உடனடியாக நேரம் கொடுத்ததன் வாயிலாக, பிரதமர் மோடி தமிழக நலனில் அக்கறையோடு இருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SUBRAMANIAN P
மே 26, 2025 13:19

அடுத்தது லைன்ல பங்களாதேஷு


Chandrasekar Mahalingam
மே 26, 2025 10:13

ஆச்சர்யம் ஆனால் உண்மை


Padmasridharan
மே 26, 2025 09:46

இலஞ்சம் எனும் பயங்கரவாதத்தை உள்நாட்டு அதிகார பிச்சைக்காரர்கள் செய்கிறார்களே.. இவர்களும், இவங்க குடும்பங்களும் நோய்வாய்ப்பட்டு இருப்பார்களே அதையும் குறிப்பிடலாம்.. கட்சிகளுக்கு அடுத்து இரட்டை வேடம் போடுவது காவலர்களே. எதுவாகினும் ஒரு கட்சியை பிடிக்கலைன்னா மற்ற கட்சி உறுப்பினர்கள் பேசிக்கிட்டுதான் இருக்காங்களே தவிர நடுவிலேயே ஆட்சியை மூட்டை கட்ட முடிகிரதா. .


அப்பாவி
மே 26, 2025 08:26

காரணம் மூர்க்கம். அடுத்தவன் அழிஞ்சி போகணும்னு அதுமட்டும் தான் நினைக்கும்.


துர்வேஷ் சகாதேவன்
மே 26, 2025 07:38

உன்னை பார்த்தாலே ஸ்லீப்பர் செல் மாறியே இருக்கு


Gentleman
மே 26, 2025 06:47

நீ யாரு கண்ணா முட்டாளாக்கிறே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை