| ADDED : ஜன 22, 2024 06:40 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சித்தோடு, செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி, 57; விவசாயி. இவருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.அங்கு கடை விற்பனையாளராக ராஜ்குமார் உள்ளார். இந்த கடையில், சட்ட விரோதமாக கூடுதல் நேரங்களில் மது விற்பனை நடப்பதாக தெரிகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதை கண்டித்து, நேற்று காலை டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்திற்கு முன் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு பீர் பாட்டில், ஏழு இந்திய தயாரிப்பு மதுபான பாட்டில்களை பறித்து கொண்டு, சம்பத் நகரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு சிவசுப்பிரமணி நேரில் வந்தார்.தகவலறிந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, சிவசுப்பிரமணியை தொடர்பு கொண்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு வருமாறு கூறினார்.அங்கு வந்த அவரிடம். மதுபாட்டில்களை ஈரோடு மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு, புகார் தெரிவிக்குமாறு அறிவுறித்தினார்.போலீசாரிடம் மது பாட்டில்களை சிவசுப்பிரமணி ஒப்படைத்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.