உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை; தொழில் செய்ய வழக்கறிஞருக்கு தடை

பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை; தொழில் செய்ய வழக்கறிஞருக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜ் என்பவர் தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக, பார் கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது:வழக்கறிஞர் சிவராஜ், மாவட்ட நீதிமன்ற பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். நீதிபதி செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின்னால் சென்றுள்ளார். அந்த பெண் நீதிபதி கோர்ட்டில், வழக்கு இல்லை என்றாலும், காலை முதல் மாலை வரை அமர்ந்து, அவரையே பார்த்து கொண்டிருந்தார்.நீதிமன்ற பணிகளை ஆய்வு செய்ய சென்ற உயர் நீதிமன்ற நீதிபதியிடம், பெண் நீதிபதி புகார் செய்துள்ளார். அவரும் வழக்கறிஞரை அழைத்து அறிவுரை கூறி, எச்சரித்துள்ளார். அதன்பின்னும், பெண் நீதிபதியை பின்தொடர்வதை நிறுத்தவில்லை. இதுகுறித்து உயர் நீதிமன்ற உதவி பதிவாளர், பார் கவுன்சிலுக்கு புகார் அனுப்பினார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, நீதி பரிபாலனத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு அவதுாறு, தொந்தரவு செய்தல் போன்ற குற்றத்திற்காக, வழக்கறிஞர் தொழில் செய்ய, சிவராஜுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Raajasekar TNT
நவ 01, 2024 17:24

ஒரு ஆண் நாகரீகமாக பெண்ணிடம் தன் காதலை தெரியப்படுத்தலாம் அந்தப் பெண்ணிற்கு காதல் பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் பிடிக்கவில்லை என்றால் எனக்கு பிடிக்கவில்லை உங்கள் தொழிலை பாருங்கள் என்று கூறிவிட்டு சென்று விடலாமே இதற்கு எதற்கு தண்டனை


Raajasekar TNT
நவ 01, 2024 17:23

அந்தப் பெண் நீதிபதி நாகரீகமாக அந்த வழக்கறிஞரின் காதலை மறுத்துவிட்டு அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி இருக்கலாமே


lana
அக் 31, 2024 22:23

இதை வேறு யாரும் செய்தால் jail. செஞ்சது ஒரு வழக்கறிஞர் எனவே இப்படிப்பட்ட கண்துடைப்பு நாடகம் தண்டனை.


Kanns
அக் 31, 2024 22:12

BC takes Action only if Judges are Affected. Whats Requirement of Bar Council IF NOT PUNISHING Vast Majority of Extortion Gangsters, Rogue-Rowdy -Criminal, CaseHungry Advocates FalseCase Encouraging& Never Arguing for Punishing PowerMisusing Rulers, Stooge Officials esp Police& Judges&Vested FalseComplainantGangs women, unions-gangs, SCs, advocates etc etc


thewhistle blower1967
அக் 31, 2024 21:49

ஏன்டா ஒரு நீதிபதியை கூட ஒழுங்கா பணி செய்ய விட மாட்டீங்களா... ஒரு சாமானியன் செய்தால் காவல் துறை நய்ய புடைத்திருக்கும் இவனுக்கு என்ன தண்டனை இது... இவன் இயற்கனவே PRACTICE செய்யாம அந்த அம்மா பின்னாடியே சுத்தி இருக்கிறான் இப்ப இன்னமும் சவுக்கிரியமா அவங்க பின்னாடி சுத்த போரான் ... வேடிக்கையான தண்டனை... இந்த நாட்டில் மட்டும்தான் இது சாத்தியம்....


Rasheel
அக் 31, 2024 11:06

நீதிக்கு பயந்தவர்கள் வழக்குரைஞர்களாக, நீதிபதிகளாக இருந்த காலம் 1960 வரை. இப்போது மிக மோசமான நிலைமை


Lion Drsekar
அக் 31, 2024 10:36

இனி இப்படித்தான் இருக்கும், எல்லா புகழும் இந்த சுதந்திரத்துக்கே , வந்தே மாதரம்


Kundalakesi
அக் 31, 2024 09:53

காதல் வந்தால் சம்மன் அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்


S. Neelakanta Pillai
அக் 31, 2024 09:40

அருமையான செய்தி. சம்பந்தப்பட்ட இருவரும் யார் என்று தெரிவிக்காமலேயே மிக அழகாக ஒரு செய்தியை கோர்வைப் படுத்தி வெளியிடுவது என்பது மொட்டை கடிதாசுக்கு சமம். ஒரு சில பணி செய்பவர்களுக்கு மட்டும் இது போன்ற பாதுகாப்பு நடைமுறை என்பது சமூக நீதி வழங்கும் இந்த அற்புதமான அறிவாளிகள் ஆட்சியில் இது ஏற்புடையது இல்லை. அசிங்கங்களையும், அரக்கதனங்களையும், அநாகரீகங்களையும் கூறு போட்டு கொச்சைப்படுத்தி குளோசப் ஷாட் ல் வெளியிடுபவர்கள் சொல்லும் காரணம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று. அநேக ரவுடிகளை கொண்ட வக்கீல் தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பு. நல்ல பத்திரிகை தர்மம்


duruvasar
அக் 31, 2024 09:21

இது குறித்து அன்னான் போண்டில்யனின் பொன்னான பகுத்தறிவு கருத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் தாண்டவக்கோனே .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை