சில வரி செய்தி
மும்பை, சென்னை, துாத்துக்குடி, கோல்கட்டா, கோவா, கொச்சி உட்பட, 12 துறைமுகங்களில், அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், கூலி தொழிலாளர் கள் என, 20,000 பேர் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, 8.5 சதவீத ஊதிய உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால், மாத சம்பளத்தில், 5,000 முதல் 15,000 ரூபாய் வரை கூடுதலாக கிடைத்துள்ளதாக துறைமுக ஊழியர்கள் கூறினர்.