சில வரி செய்தி
தமிழகத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு, ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க, சிவில் சப்ளை சி.ஐ.டி., நுண்ணறிவு பிரிவு போலீசார் வாயிலாக ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டு, கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிக்கிய, 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.