சில வரி செய்தி
விரைவு ரயில்களில் புதிதாக இணைக்கப்படும், எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகளில், எளிதில் தீப்பிடிக்காது, சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங் வசதி உட்பட பல வசதிகள் இருக்கும். எழும்பூர் - கேரளா மாநிலம் கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், நவ., 11ம் தேதி முதல் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.